காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் திடீர் தற்கொலை.. காரணம் இதுதானா? பிரபலங்கள் வருத்தம்
காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து கொண்டிருந்த நடிகர் ஹரி திடீரென தற்கொலை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஹரி திடீரென தற்கொலை செய்து இருக்கிறார்.
நடிகர் ஹரி ஒரு கானா பாடகராகவும், பாடல் எழுதுபவராகவும் இருந்து வந்தார்.
அவருடைய திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கானா பாடகர் ரவி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் தற்போது இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த நடிகர்கள் பலர் மாறிவிட்டனர். இவருக்கு பதில் இவர் என்று அடிக்கடி இந்த சீரியலில் மாற்றம் வந்து கொண்டே வந்த நிலையில் இந்த சீரியலின் கதாநாயகி வெண்ணிலாவின் காலேஜ் பிரண்டாக தமிழ் கேரக்டரில் கானா பாடகர் ஹரி நடித்திருப்பார்.

பல திறமைகள்
கானா பாடகராகவும், ஒரு நடிகராகவும் பாடல் எழுதுபவராகவும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார் குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் மலர், பாண்டியின் திருமணத்தின் போது பாடப்பட்ட பாடல் இவருடையது தான். இந்த பாடலில் இவர் எழுதி, பாடி, நடித்தும் இருப்பார். இவருடைய திறமைக்கு வாய்ப்புகள் அந்த அளவிற்கு கிடைக்காமல் இருந்தாலும் காற்றுக்கென்ன வேலி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

ராகவேந்தர் புலியின் இரங்கல்
இந்த நிலையில் நேற்று இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. இவரோடு சீரியலில் நடித்த பல பிரபலங்கள் தொடர்ந்து இவருக்கு இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர். அதில் இவரோடு காற்றுக்கென்ன வேலி சீரியலில் நண்பனாக நடித்த ராகவேந்திரன் புலி, ஹரி, டேய் ஏண்டா? வில் யு மிஸ் யூ டா, இடியட், தற்கொலை என்பது ஒரு தீர்வாகாது. ரத்தம் சிந்திய நான் உனக்கு எத்தனை முறை அறிவுரை கூறியிருப்பேன். போடா! டேய், நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்று ஏமாற்றத்தோடும் வருத்தத்தோடும் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.

இது சரியான முடிவு இல்லை
மட்டுமல்லாமல் காற்றுக்கென்ன வேலியில் தமிழ் கேரக்டரில் ஹரி நடித்து வந்தததால், அவர் அந்த கேரக்டராகவே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் அவரோடு மாறனாக நடித்த ராகவேந்திரன் புலி என்னுடைய தம்பி ஹரி ரொம்பவே டேலண்டான நபர். இப்போ அவன் இல்லை. எப்போதும் அவன் ராகவேந்திரா, அண்ணா ராகவேந்திரா அண்ணானு பேசிகிட்டு இருந்தது என்னுடைய காதில் கேட்டுகிட்டே இருக்கு. அதிலிருந்து என்னால் வெளியே வர முடியல, எல்லோருக்கும் ஒன்னே ஒன்னு நான் சொல்லிக்கிறேன். லைஃப்ல நாம என்னலாம் ஆசைப்படுறோமோ அதெல்லாம் கிடைச்சிராது. அது மட்டும் இல்லன்னா இந்த மாதிரி ஒரு முடிவு யாரும் எடுக்காதீங்க, என்னதான் எனக்கு அழுகை இருந்தாலும் அவன் மேல எனக்கு கோவம் தான் இருக்கிறது.

தற்கொலை தீர்வாகாது
ஒரு வார்த்தை யார்கிட்டயாவது பேசி இருக்கலாம். போன வாரம் கூட ஒருத்தங்களோட போன் நம்பர் குடுங்க என்று என்கிட்ட பேசினான். ரொம்ப நல்ல பையன், ஆனா எப்பவும் ஒரு தனிமையில் லோன்லியாக இருப்பான்.நான் அதிலிருந்து வெளியே வரவேண்டும்னு பலமுறை சொல்லி இருக்கிறேன். காற்றுக்கென்ன வேலி சீரியலில் நான் நடிக்கும் போது அவனிடம் தனியாக நானே பேசினேன். எதற்காக இப்படி இருக்கிறாய் என்று, அப்போதுதான் அவனோட எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணினான். ஆனா இப்போ அவன் இல்லை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் எல்லோருக்கும் என்ன சொல்றேன்னா தற்கொலை என்பது ஒரு சொலுஷன் கிடையாது. அது மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் ஆப்பர்சுனிட்டி கிடைக்க மாட்டேங்கிறது. எல்லோருக்கும் மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக இப்படி பண்ண கூடாது என்ற கண் கலங்க வேண்டுகோள் வைத்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ஹரி தற்கொலை செய்வதற்கு காரணம் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தான் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications