ஏமாற்றத்தில் கழிந்த நடிகை சீதாவின் வாழ்க்கையின் மறுபக்கம்... சின்னத்திரையை நோக்கி வந்த காரணம்
சென்னை: நடிகை சீதா புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட பிறகு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஏமாற்றங்கள் குறித்து அவர் பேசி இருக்கிறார்.
வருடத்திற்கு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருந்த சீதா திருமணத்திற்கு பிறகு சீரியலை நோக்கி வந்த காரணத்தை பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

சம்பளம் வாங்காத முதல் திரைப்படம்
நடிகை சீதா முதல் முதலாக ஆண்பாவம் எனும் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இந்த சீரியலில் முதல் நாள் சீனில் இவர் இடுப்பில் குடத்தை வைத்துக்கொண்டு நடிக்க வேண்டும் என்ற போது இவருக்கு சரியாக நடிக்க வராததால் இவரை பாண்டியராஜன் அடித்துவிட்டாராம். அதனால் இவர் கோபித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டாராம். பிறகு மூன்று நாட்கள் கழித்து இவர்களுடைய வீட்டுக்கு பாண்டியராஜன் சென்று இவரை சமாதானம் செய்து அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். பின்பு அந்த திரைப்படம் இவர் எதிர்பார்க்காத அளவில் பெரிய அளவில் வெற்றி பெறவே முதல் நாள் இவருக்கு அப்பாஸ்டர் கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. முதல் திரைப்படத்தில் இவர் சம்பளம் வாங்காததால் திரைப்படத்தின் வெற்றிக்காக இவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டிருந்ததாம்.

காதல் உருவான விதம்
அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இவருக்கு புதிய பாதை திரைப்படத்தில் நடிக்க நடிகர் பார்த்திபன் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது புதிய இயக்குனர் என்பதால் இவருடைய இயக்கத்தில் தான் நடிக்க விருப்பமில்லை என்று சீதா கூறிவிட்டாராம். ஆனால் இவருடைய தந்தை தான் அந்த கதையை கேட்டு பிடித்து போய் இது நல்ல கதையாக இருக்கிறது. இதில் நடித்தால் உனக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கிறது என்றும் இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தாராம். ஆரம்பத்தில் இவர் அறிமுக இயக்குனர் எப்படி எடுக்கப் போகிறாரோ என்று எதிர்பார்த்த சீதா பின்பு இந்த திரைப்படத்தின் பாதியிலேயே பார்த்திபனை காதலிக்க தொடங்கி விட்டாராம்.

திடீர் திருமணம்
சீதாவின் காதல் தகவல்கள் வீட்டிற்கு தெரிந்ததும் அவருடைய தந்தை ரொம்பவே திட்டினாராம். அதற்கு சீதா நான் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று தானே சொன்னேன். நீங்க தானே இதில் நடிக்க சொன்னீர்கள். நான் நடிக்காமல் இருந்திருந்தால் எனக்கு இந்த காதல் வந்து இருக்காதே என்று இவரே எதிர்த்துப் பேசி இருந்தாராம். பின்பு ஒரு சில நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு கூட சீதாவிற்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் பார்த்திபனுக்கு பிடிக்காததால் அந்த திரைப்படங்களில் இவர்கள் நடிக்காமல் விட்டுவிட்டாராம்.

ஏமாற்றத்தில் முடிந்த வாழ்க்கை
சுமார் 13 வருடங்கள் கழிந்த நிலையில் வாழ்க்கையில் பல்வேறு ஏமாற்றங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த சீதா பார்த்திபனோடு சுமுகமாக பிரிந்து மீண்டும் அவருடைய தந்தை வீட்டிற்கே வந்திருக்கிறார். ஆனால் அப்போது இவருக்கு பண பிரச்சனையும் அதிகமாக இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் இவருக்கு நடிப்பை தாண்டி வேற எதுவும் தெரியாததால் மீண்டும் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி இருக்கிறார். அந்த நேரத்தில் திரைப்படங்களில் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பான வேலன் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பல வருடங்கள் கழித்து இந்த சீரியலில் இவரைப் பார்த்த இவருடைய ரசிகர்கள் இவருக்கு அதிகமான ஆதரவு கொடுக்க இவருக்கு தொடர்பு சீரியல் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

ஏற்றம் கொடுத்த சீரியல் வாழ்க்கை
2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலிலும் அதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு பெண் அதைத் தொடர்ந்து ஜனனம் இதயம் என தமிழ் சீரியலிலும், மலையாளம், தெலுங்கு என பல மொழி சீரியல்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு இவருக்கு தொடர்ச்சியாக திரைப்படங்களிலும் கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்டது. அம்மாவாகவும் துணை கதாபாத்திரத்தில் இவர் இப்ப வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய காதல் கதை மற்றும் சீரியலுக்கு இவர் வந்ததன் பின்னணி தற்போது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications