"சிக்கலான கேள்வி” மகாலட்சுமியின் எளிமையாக பதில்.. சும்மா மிரட்டுறாங்களே...!!
சென்னை: மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போட்டோவும் அதற்கு கொடுத்த கேப்ஷனும் ரசிகர்களுக்கு குழப்பத்தை கொடுத்திருக்கிறது.
வலைத்தளத்தில் படு ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி இப்போ புடவையில் பவ்யமாக வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

அரசி சீரியலில் அறிமுகம்
மகாலட்சுமி கல்லூரி படிப்பை முடித்ததும் சன் மியூஸிக்கில் ஒரு விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார் .அவர் விஜேவாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இவருடைய குரலை கேட்பதற்காகவே ஒரு கூட்டம் சன் மியூசிக் பார்த்து வந்ததாக கூறி வருவர். இந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு ராதிகா நடித்த அரசி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .முதல் சீரியலில் இவர் நடிப்பை அழகாக வெளிகாட்டி இருந்தார். இவருக்காகவே இவருடைய ரசிகர்கள் பலர் இந்த சீரியலை பார்த்து வந்திருக்கிறார்கள்.

பிடித்தது வில்லத்தனம் தான்
அரசி சீரியலை தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல், ஆபீஸ், செல்லமே, பிள்ளை நிலா, உதிரி பூக்கள், வாணி ராணி, சித்தி 2 என பல சீரியல்களில் நடித்துக் இருக்கிறார். தற்போது அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் .இவர் நடிக்கும் சீரியல்களில் அதிகமாக வில்லத்தனத்தால் மிரட்டும் வில்லியாக தான் நடித்து வருகிறார். இதை குறித்து அவரே தனக்கு வில்லியாக நடிப்பதில் தான் சந்தோஷம் அதுதான் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டுவதற்கு சிறந்த கேரக்டராக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

திடீர் திருமணம்
அதோடு வில்லியாக நடிப்பதால் அது தன்னுடைய சொந்த வாழ்க்கையில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது. சூட்டிங் ஸ்பாட்டில் மட்டும்தான் நான் அப்படி இருப்பேன். சூட்டிங் முடிந்ததும் எப்போதும் போல ஜாலியாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான் இவர் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தற்போது தயாரிப்பாளரான ரவீந்திரரை காதலித்து திருமணம் செய்துள்ளார் .ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்று இருந்த மகாலட்சுமி தற்போது தன்னுடைய மகனோடு ரவீந்திரனுடன் வாழ்ந்து வருகிறார்.

குழப்புறாங்களே பாஸ்
திருமணத்திற்கு பிறகும் இவர் சீரியலில் நடித்து வருகிறார். சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய கணவருடன் வெளியே சென்று அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.இவருடைய திடீர் திருமணம் ஏற்கனவே பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தற்போது புடவையில் பவ்யமாக போஸ் கொடுத்து மகாலட்சுமி வெளியிட்ட பதிவுதான் பலரையும் குழப்பத்தில் ஏற்படுத்தி இருக்கிறது

சிக்கலான கேள்விகள்
சில நேரங்களில் கேள்விகள் சிக்கலானதாகவும் பதில்கள் எளிமையானதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதைக் குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருந்த மகாலட்சுமி இப்போது திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் போது எதற்கு இந்த பதிவு என்று பலரும் யோசித்து வருவதாக குறிப்பிட்டிருக்கின்றனர். ஒரு சில ரசிகர்கள் என்ன தான் யோசித்து யோசித்து மகாலட்சுமி இடம் சிக்கலான கேள்விகளை கேட்டாலும் அதற்கு அவர் சிரிப்பு ஒன்றை எளிமையான பதிலாக கூறி விடுகிறார் என்று மாஸாக விளக்கம் அளித்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications