பிக்பாஸ் வீட்டுக்குள் இதுதான் நடக்குது.. ஆனா இது ரொம்பவே வருத்தமானது..முதல் முறையாக மனம் திறந்த ராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய ராம் முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியிருக்கிறார்.

போட்டியாளர்கள் பலரும் இதற்கு முந்தைய பிக் பாஸ் சீசன்களை பார்த்துவிட்டு தங்களுடைய பெயர் வெளியே கெட்டு விடக்கூடாது என்பதற்காகவே பார்த்து பார்த்து இருந்து வருவதாக பல தகவல்களை கூறி இருக்கிறார்.

போட்டியாளர்களின் குற்ற சாட்டுகள்

போட்டியாளர்களின் குற்ற சாட்டுகள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியளராக அறிமுகமாகி கடந்த வாரத்தில் வெளியேறிய ராம் ஆரம்பத்தில் விளையாடவில்லையே என்றும், இவர் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், சாப்பிடுவதற்கும் தூங்குவதற்காக தான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார் என்றும் இவரை குறித்து சக போட்டியாளர்கள் அதிகமாக குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருந்தனர். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் அமைதியாகவே ராம் இருக்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருந்தது. ஆனால் இவர் வெளியே செல்வதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய விளையாட்டை சிறப்பாக துவங்கி இருந்தார்.

கோபப்பட்ட தருணம்

கோபப்பட்ட தருணம்

இந்த நிலையில் கடந்த வாரம் இவர் வெளியேற்றப்பட்டதும் இவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவரும் அதை ஃபீல் பண்ணி இருக்கிறார். இவரை நாமினேசன் செய்யும்போதும் அல்லது கமல் முன்பு பேசும்போதும் இவர் இங்கே ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவது எனக்கு வருத்தமாக இருக்கும். அதைக் கேட்ட பிறகு தான் நான் கோபத்தை வெளியே காட்ட தொடங்கினேன். எளிதாக எனக்கு கோபம் வராது என்னையே அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் கோபப்பட வைத்துவிட்டனர். ஆனால் டாஸ்க் நேரத்தில் மட்டும் தான் நான் கோபப்பட்டு இருக்கிறேன் தவிர மத்த நேரங்களில் நான் கூலாக தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அசீமை பற்றிய கருத்து

அசீமை பற்றிய கருத்து

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அசீம் அதிகமாக கத்தி கொண்டிருப்பதாகவும், சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகவும் பலரும் கருத்து கூறுவார்கள். ஆனால் அசீம் என்னை பொருத்தவரையில் அவருடைய விளையாட்டை சரியாக விளையாடுகிறார். சில நேரங்களில் கோபத்தையும் காட்டி விடுகிறார் அப்போது எடுத்துச் சொன்னால் கூட புரிந்து கொள்வான். யாரிடம் எப்படியோ ஆனால் என்னிடம் அசீம் நல்ல மாதிரி தான் நடந்து கொண்டிருந்தார். அதுபோல விக்ரமனும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சரியான கேள்விகளை கேட்டு நியாயமாக நடந்து கொள்வார் என்று கூறியிருக்கிறார்.

விக்ரமனின் நிஜமான கேரக்டர்

விக்ரமனின் நிஜமான கேரக்டர்

விக்ரமன் பெண்களுக்காக மட்டுமே கேள்வி கேட்பார். அதே நேரத்தில் அசீம் எந்த பிரச்சினையில் ஈடுபட்டிருந்தாலும் அப்போது மட்டுமே கேள்வி கேட்பார் என்ற கருத்து ரசிகர்களின் மத்தியில் உருவாகி இருக்கும் நேரத்தில் அதுவெல்லாம் உண்மை கிடையாது. விக்ரமன் யாருக்காக என்றாலும் கேள்வி கேட்பார். ஆனால் ஆரம்பத்தில் யாரையாவது சும்மா கலாய்த்தால் கூட அதைப் பற்றியும் தன்னுடைய கருத்தை தெரிவித்து இது தவறு என்று விளக்கம் கொடுத்து கொண்டிருப்பார். அதற்கு பிறகு இது கலாய்ப்பு வேற சண்டை வேற என்று அவரு நான் கூட எடுத்து கூறி இருக்கிறேன். கடைசியில் நல்ல விதமாகத்தான் அவரும் நடந்து கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்.

ஜனனிக்கு அமுதவாணனுக்கும் உள்ள உறவு

ஜனனிக்கு அமுதவாணனுக்கும் உள்ள உறவு

அதேபோல ஜனனி மற்றும் அமுதவாணன் பழகுவதை பார்க்கும் போது இவர்களுக்கு நட்பை தாண்டியும் ஒரு ஈர்ப்பு இருப்பதாக தோன்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதை குறித்து அதில் பேசியிருக்கிறார். அமுதவாணனுக்கு அதிகமாக வயது வித்தியாசம் இருக்கிறது. ஜனனியை ஒரு தங்கை போல தான் பாதுகாத்து வருகிறார் .பிக் பாஸ் வீட்டிற்குள் யாருக்கு பிரச்சனை என்றாலும் அமுது கேட்பார். ஆனால் ஜனனிக்கு என்றால் கூடுதல் கவனத்தோடும், பாசத்தோடும் வந்துவிடுவார். அவ்வளவு தான் நட்பை தாண்டி அவர்களுக்குள் எதுவும் இருந்தது போல எனக்கு தெரியவில்லை நான் அருகில் இருந்தே பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+