பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்! வெளிப்படையாக நடிகை ரிஹானா விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் இருந்து நடிகை ரிஹானா திடீரென்று விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சன் டிவி சீரியல் நடிகை மாதவி அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்று ரிஹானா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் நடிகை ரிஹானா சின்னதிரை ரசிகர்களுக்கு ஏற்கனவே பழக்கமானவர்தான். அடிக்கடி பல பேட்டிகளில் பேசி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். நடிகையாக பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவர் நடிகைகளுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதிலும் நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது கூட ரிஹானா விஷ்ணுகாந்துக்கு ஆதரவாக பேசி வந்தார். அதேபோல சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அருணவ் குடும்பப் பிரச்சனை பெரிய அளவில் வெடித்த போதும் திவ்யா ஸ்ரீதர்க்கு ஆதரவாக பேசி வந்தார். இந்த நிலையில் இவர் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் ராஜியின் சித்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியலில் இருந்து விலகி இருந்தார். இதனால் ரசிகர்கள் என்ன ஆச்சு இவரை காணவில்லையே என்று தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவர் தான் எதற்காக சீரியலிருந்து விலகினேன் என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் என்னுடைய தனிப்பட்ட பர்சனல் காரணங்களுக்காகத்தான் நான் சீரியலில் இருந்து விலகுகிறேன்.

கதைப்படி இந்த சீரியல் கேரக்டர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறதால எனக்கு பிரேக் எடுக்க முடியாது. அதனால தான் சீரியலிருந்து விலக வேண்டியது ஆயிடுச்சு. உங்க எல்லாரையும் போல நானும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதை நேரத்தில் ரிஹானாவுக்கு பதிலாக அவர் நடித்து வந்த கேரக்டரில் நடிகை மாதவி நடிக்கிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ரிஹானா பல சீரியல்களில் பல்வேறு கேரக்டரில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் உள்ள கேரக்டர் தான் இவருடைய கேரக்டருக்கு இயல்பாக பொருந்தி இருந்தது. அதனாலையே இவருக்கு ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பும் கிடைத்திருந்தது. இந்த நிலையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதால் இவரை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications