சிறகடிக்க ஆசை அடுத்த வாரம்: கார் விஷயத்தில் மாட்டிய ரோகிணி.. முத்து கேட்ட கேள்வி!ஜெயிலுக்கு போகும் விஜயா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவின் கார் சாவியை எடுத்து சிட்டியிடம் கொடுத்தது யார் என்று கேள்வி வரும் நிலையில் ரோகிணி வாயை கொடுத்து மாட்டி விடுகிறார். அதே நேரத்தில் ரோகிணியால் விஜயாவுக்கும் புது பிரச்சனை வருகிறது.
சிறக்கடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் முழுக்க பெரிய அளவில் பரபரப்பு இல்லாமல் இருந்தது. முத்துவின் கார் விபத்துக்கு உள்ளாகும் போது கூட அடுத்து முத்து இப்படித்தான் ஏதாவது வேண்டாத வேலை செய்வார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதேபோல முத்து குடித்துவிட்டு அருண் வீட்டில் பிரச்சனை செய்திருந்தார். இதனால் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லை. ஆனால் அடுத்த வாரத்தில் தான் இந்த சீரியலில் பெரிய சம்பவமே நடக்க இருக்கிறது.

விஜயாவிற்கு பிரச்சனை
ரோகினியால் விஜயாவிற்கு பிரச்சனை வரப்போகிறது. அதாவது சிட்டியிடம் ஒரு திருட்டு நகை கிடைத்திருக்கிறது. அந்த திருட்டு நகையை ஒரு லட்சத்திற்கு தாரேன் நின்று சிட்டி ரோகினி இடம் ஏமாற்றுகிறார். அதையும் ரோகிணி வாங்குவதற்கு ஆசைப்படுகிறார். காரணம் விஜயாவிடம் இதை கொடுத்து எப்படியாவது விஜயா மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் ரோகினியின் பிளான். தன்னிடம் பணம் இல்லை என்பதால் வித்யாவிடம் பணம் கேட்டிருக்கிறார்.
ரோகினி போடும் பிளான்
வித்யாவிடம் அவருடைய காதலர் முருகன் வீடு வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை கேட்க சொல்லி இருக்கிறார். எப்படி நிஜ வாழ்க்கையில் ஒருவரிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தால் உறவினர்களும், நண்பர்களும் சுற்று போட்டு அதற்கு வேட்டு வைப்பார்களோ அதே போல இப்போது ஒரு ரோகிணியும் வித்யாவில் காதலர் பணத்திற்கு வேட்டுவைக்க போகிறார். சரி இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கும்போது இனி பணத்தை ரெடி செய்து ரோகிணி அந்த நகையை வாங்கி கொண்டு விஜயிடம் கொடுக்கும் போது தான் விஜயாவுக்கு பிரச்சனை வரும் அதனால் ஜெயிலுக்கு போக போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
முத்துக்கு சந்தேகம்
அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனில் முத்து மீது தவறில்லை என்று மீனா நிரூபித்திருக்கிறார். அங்கு இருந்த கான்ஸ்டபிள் முத்துவின் காரில் ஏற்கனவே பிரேக் பிடிக்கவில்லை, அவருடைய காரில் ஒயர் கட் பண்ணி விட்டிருந்தது. அதனால் தான் பிரேக் பிடிக்காமல் போயிருந்தது என்ற உண்மையையும் சொல்லி இருக்கிறார்கள். இதனால் முத்துவிற்கு சந்தேகமும் வந்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கென்று வெளியான ப்ரோமோவில் முத்து இது பற்றி வீட்டில் பேசுகிறார்.
மாட்டும் ரோகிணி
என்னுடைய கார் ஒயரை கட் பண்ணி விட்டு இருக்கிறது என்றால் இந்த வீட்டில் இருக்கும் ஒருவர் உதவி செய்யாமல் இதை யாராலும் பண்ண முடியாது. என்னுடைய கார் சாவியை யார் எடுத்துக் கொடுத்து இருப்பார் என்று சந்தேகத்தோடு ரோகிணியை பார்க்க அதற்கு ரோகிணி எங்கப்பன் குதிலுக்குள் இல்லை என்று சொல்வது போலவே நான் ஒன்னும் உங்க கார் சாவி எடுத்துக் கொடுக்கல, நீங்க ஆணியில் மாட்டி இருந்த சாவியை நான் எதுக்கு எடுக்க போறேன் என்று சொல்ல, நான் சாவி ஆனியில் மாட்டி இருந்தேன் என்று சொல்லவே இல்லையே என்று முத்து பாய்ண்ட் பிடிக்கிறார். இதனால் ரோகினிக்கு அடுத்த வாரம் பெரிய பிரச்சனை இருக்கிறது.
-
தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை? -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்!












Click it and Unblock the Notifications