அந்த மாதிரி வருபவர்கள் தான் அத்து மீறுவார்கள்.. பல ரகசியங்களை உடைத்த தொகுப்பாளர் ஜாக்குலின்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிலர் செய்யும் செயல்கள் தான் கடுப்பாக இருக்கிறது என்று தொகுப்பாளர் ஜாக்குலின் கூறியிருக்கிறார்.
சென்னை: தொகுப்பாளர் ஜாக்குலின் தொகுப்பாளராக இருக்கும்போது சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பேசியிருக்கிறார்.
நிகழ்ச்சிகளில் ஒரு சில சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அவர்கள் நம்மிடம் அனுமதி கேட்காமல் தொட்டு பேசுவது கடுப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிய ஜாக்குலின் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சீரியலில் அறிமுகம்
விஜய் டிவியில் ஜாக்குலின் ஆரம்பத்தில் அதிகமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆனால் தற்போது இவர் அதிகமாக எந்த நிகழ்ச்சிகளிலும் காணப்படாமல் இருக்கிறார். இது குறித்து இவருடைய ரசிகர்கள் இவரை தேடி வருகின்றனர். தன்னுடைய விடாமுயற்சியால் ஒவ்வொரு இடத்திலும் சாதித்து வந்த ஜாக்லின் தொகுப்பாளராக இருந்து தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த சீரியல் பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் அதில் இவர்தான் கதாநாயகியாக தொடர்ந்து வந்தார். தற்போது அந்த சீரியல் முடிவடைந்து இருக்கிறது. அதற்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் இவர் நடிக்காமல் இருந்து வருகிறார்.

அத்து மீறல்கள்
இந்த நிலையில் இவர் தற்போது youtube சேனலில் இவர் வெளியே செல்லும் இடங்களை அப்படியே வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகிறார். அவரிடம் தொடர்ந்து ரசிகர்கள் எதனால் தொகுப்பாளராக வரவில்லை. மீண்டும் நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜாக்குலின் பல விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் தொகுப்பாளராக இருக்கும்போது, ஒரு சிலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் அவர்கள் செய்யும் செயல்கள் கடுப்பாக இருக்கும். நம்மிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் தொட்டு பேசுவது, தூக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

பரவிய வதந்தி
அது மட்டுமல்லாமல் பெரிய பிரபலங்கள் எல்லாம் வந்து இருக்கிறார்கள். அவர்கள் கூட ஒரு போட்டோ எடுக்கணும் என்றால் கூட அவர்கள் ஒதுங்கி நின்று தான் நமக்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் ஒரு சிலர் நாங்கள் தான் பெரிய செலிப்ரிட்டி என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டு செய்யும் செயல்களை பார்க்கும் போது ஓங்கி கன்னத்தில் அடித்து விடலாம் என்று தோன்றும் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஆரம்பத்தில் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் இருவரும் தான் அதிகமான நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வருவார்கள். அதனால் இருவருக்கும் காதல் என்ற வதந்திகள் பரவி வந்தது.

வதந்திகளுக்கு விளக்கம்
தன்னைப் பற்றி ரக்ஷன் உடன் சேர்த்து பரவி வந்த வதந்திகளுக்கு எந்த இடத்திலுமே ஆமாம் அல்லது இல்லை என்று பதில் கொடுக்காமல் இருந்து வந்த ஜாக்குலின் அதைப்பற்றி தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். அதற்கு ரக்ஷன் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவருக்கு கல்யாணம் முடிந்தது எனக்கு ஏற்கனவே தெரியும். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு நான் இப்போ வரைக்கும் நல்ல ஒரு நிலையில் பேசி பழகி வருகிறேன். இதனால் தேவையற்ற வதந்திகளுக்கு நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தான் எந்த இடத்திலும் நான் அதைக் குறித்து பேசவில்லை என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications