நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.. இதுதான் உண்மை.. CWC விலகல் குறித்து மணிமேகலை முதல் முறை விளக்கம்
குக் வித் கோமாளியில் இருந்து எதற்காக வெளியேறினேன் என மணிமேகலை கூறி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 ல் இருந்து மணிமேகலை திடீரென தான் விலகுவதாக அறிக்கை கொடுத்திருந்தார்.
இதுவரைக்கும் தான் எதற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என கூறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கோமாளியாக நான் வெளியேறி மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு செப்பாக வருவேன் என மணிமேகலை கூறி இருக்கிறார்.

மணிமேகலையின் விலகல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பமான நாளிலிருந்து அதிகமான ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வந்தாலும் இதில் ஒரு சில கோமாளிகள் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மணிமேகலையும் ஒரு நபராக இருந்து வந்தார் ஆனால் திடீரென்று இந்த சீசனில் இருந்து தான் விலகிக் கொள்வதாக சில தினங்களுக்கு முன்பு அறிக்கை விட்டிருந்தார். ஆனால் எந்த காரணத்திற்காக தான் வெளியேறப் போகிறேன் என்பது பற்றி அதில் அவர் குறிப்பிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்து கொண்டிருந்தது.

தொடரும் யூகங்கள்
சும்மாவே ஒன்று என்றால் 9 என பரவும் உலகத்தில் மணிமேகலை எதற்காக தான் விலகுகிறேன் என்பதை பற்றி சொல்லாத காரணத்தால் பல்வேறு யூகங்களும் மளமளவென அதிகரித்து வருகிறது. குறிப்பாக குக் வித் கோமாளி செட்டில் மணிமேகலைக்கு கருத்து வேறுபாடு அதுவும் செஃப்போடு கருத்து வேறுபாடு என்றும், இல்லை இல்லை சிவாங்கிக்கும் மணிமேகலைக்கும் சண்டை அதனால் தான் மணிமேகலை கோபத்தில் வெளியே வந்து விட்டார் என்றும், அதுவெல்லாம் இல்லை சிவாங்கி கூட மணிமேகலையின் போஸ்ட்க்கு கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதனால் இது தவறு என்று இன்னொரு சிலர் கூற வருகின்றனர்.

புது வீடு பூஜை
இந்த சில்லி காரணங்களுக்காக மணிமேகலை வெளியேறவில்லை அவர் கர்ப்பமாக இருக்கிறாராம் அதனால் தான் வெளியேறினார் என்றும் சிலர் அடித்து கூறி வந்தனர். ஆனால் மணிமேகலை எந்த கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்காமல் தன்னுடைய வேலையில் பிசியோ பிஸியாக இருந்து வந்தார். தன்னுடைய கிராமத்திற்கு சென்று தான் தன்னுடைய கணவரோடு வாங்கிய சொந்த இடத்தில் புது வீடு கட்டுவதற்கான பூஜைகள் எல்லாம் செய்து விட்டு தற்போது மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்.

இதுதான் காரணமாம்
இந்த நிலையில் சென்னைக்கு வந்த மணிமேகலை குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரோடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நண்பர்களும் மணிமேகலையிடம் மேடையிலே எதற்காக மணிமேகலை வெளியேறினார் என்று எங்களிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையான காரணத்தை சொல்லி விடுங்கள் மணிமேகலை என்று சொல்ல, மணிமேகலை நான் கோமாளியாக இருந்து விலகி விட்டு அடுத்த சீசனில் செஃப்பாக வர இருக்கிறேன் என்று சொல்ல, அந்த அரங்கமே அதிர்ச்சியாகி, இது என்ன காரணம் உண்மையை சொல்லுங்க மணிமேகலை என்று கேள்வி எழுப்ப, மணிமேகலை அப்போதும் கழுவுற மீனில் நழுவுற மாதிரி நான் அடுத்த சீசனில் செஃப்பாக வந்து எல்லோரையும் ஒரு பாடுபடுத்த போகிறேன் என்று தனக்குரிய காமெடியோடு பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு ஜூட் விட்டுவிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications