Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலுக்குப் போன அப்பா திரும்பல... பல ஏமாற்றமும், அவமானமும்.. கண்கலங்கி மனம் திறந்த சரிகமபா நாகார்ஜுனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 3 போட்டியாளராக நாகார்ஜுனா கலந்து கொண்டிருந்தார்.

சரிகமப நிகழ்ச்சியில் தன்னுடைய குரலால் பல பாடல்களை பாடி பலருடைய மனதிலும் நாகார்ஜுனா இடம் பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சோகமான வாழ்க்கை ஆரம்பத்தை பற்றி பல தகவல்களை நாகார்ஜுனா கூறி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 what zee Tamil SaReGaMaPa Nagarjuna said about my father

ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் இருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் ஒரு நபராகத்தான் நாகார்ஜுனா இருந்து வந்தார். இவர் ராமநாதபுரத்தில் ஒரு மீனவ குடும்பத்தில் இருந்து தான் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார். தான் மீன் பிடிக்கப் போகும்போது பாட்டு பாடிக்கொண்டே இருப்பாராம்.

அந்த மாதிரி இவர் பாடும் போது தான் இவருடைய அம்மாவும் மாமாவும் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்திருந்தார்களாம்.சின்ன வயதில் இருக்கும்போதே இவருடைய அப்பாவுக்கு இவரை எப்படியாவது ஒரு பாடகராக ஆக வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. ஆனால் கடலுக்கு மீன் பிடிக்கப் போன அவருடைய அப்பா திரும்பவே இல்லையாம். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்ட செய்தி இவருக்கு கிடைத்திருக்கிறது. அதற்குப் பிறகு இவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய் இருக்கிறது.

ஆனாலும் எப்படியோ இவர் பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்திருக்கிறார். அதற்கு பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக இவர் பத்தாம் வகுப்புக்கு மேலே படிக்கவில்லையாம். கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருக்கிறார். வீட்டிலும் இவருக்கு ஒரு அக்காவும் ஒரு தங்கையும் இருந்து இருக்கின்றனர். அவர்களுடைய திருமணத்தையும் நாகர்ஜுனா தான் செய்து வைத்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது இங்கே எப்படி நம்மால் தொடர முடியும் நம்முடைய குடும்ப சூழ்நிலை இருக்கிறதே என்றெல்லாம் இவர் யோசித்து இருந்தாராம்.

 what zee Tamil SaReGaMaPa Nagarjuna said about my father

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கிடைக்கும் வரவேற்பு அதிகமாக இருப்பதை பார்த்து ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் பார்ப்பவர்கள் எல்லாம் அவர்களுடைய சொந்தக்காரர்கள் உறவினர்கள் போல நடத்துகிறார்கள் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார். எப்படியோ போராடி, பாட்டு முறைப்படி தெரியாமலே தன்னுடைய முயற்சியால் இந்த நிகழ்ச்சியில் அனைவருடைய மனதை கவர்ந்த நாகார்ஜுனா அவருடைய அப்பாவின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+