தற்கொலை முயற்சி..! அடுத்த திருமணம் எப்போ..? நடிகை சம்யுக்தா திடீர் லைவில் சொன்ன விஷயம்
சென்னை: சின்னத்திரை நடிகை சம்யுக்தா இன்று மீண்டும் லைவில் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.
அதில் ஒரு ரசிகர் அடுத்த திருமணம் எப்போது என்று கேள்வி கேட்ட நிலையில் அதற்கு பதிலும் கொடுத்திருக்கிறார்.
நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அது நடக்காது போல இருக்கு என்று கூறி இருக்கிறார்.
பலர் போல பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் நான் தற்கொலை முயற்சி செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் மூலம் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய குடும்ப பிரச்சனைகளை விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்த நிலையில் இப்போது ஒருவர் மாற்றி ஒருவர் பல குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் இவர்களுடைய திருமணம் நடந்திருந்தது. அதை தொடர்ந்து சில மாதங்களுக்குள் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஷ்ணுகாந்த் சில youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்ததை தொடர்ந்து சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் ரசிகர்களின் முன்பு விஷ்ணுகாந்த் பேசிய வார்த்தைகளுக்கு பதில் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் விஷ்ணுகாந்த் 6:00 மணிக்கு தான் லைவில் வரப்போவதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதற்கு முன்பாகவே சமித்தா திடீர் லைப் வந்து இருக்கிறார். அப்போது இன்றைய லைவில் ரசிகர் ஒருவர் அடுத்த திருமணம் எப்போது என்று கேட்க, ஏற்கனவே நான் ஒரு திருமணத்தில் பட்ட பாடு போதாதா? இனி எனக்கு திருமணமே வேண்டாம் என்று விரக்தியில் கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நான் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் அப்படியான சூழ்நிலை இல்லை.
லைவில் 6000 ரசிகர்களுக்கு மேலே வரும் வரைக்கும் காத்திருந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சம்யுக்தாவிடம் ரசிகர்கள் பலரும் நீங்கள் இப்படி குடும்ப பிரச்சினையை சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருந்தால் பிரச்சனை பெரியதாக தான் ஆகி கொண்டு இருக்கும் என்று கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் தைரியமான பெண் என்றெல்லாம் இவருக்கு ஆறுதல் கூறி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications