இக்கட்டான நிலைமையிலும் விஜயகாந்த் பார்க்க ஆசைப்பட்ட நடிகர்..மனுஷன் தங்கம்னு நிரூபிச்சிருக்காரு
சென்னை: நடிகர் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு அரசியல் பிரமுகராகவும் இருந்து வருகிறார். அவருடைய உடல்நிலை சமீப காலமாக சரியில்லாமல் இருந்தாலும் அவர் தொடர்ந்து பலருக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.
வாழ்க்கை யாருக்கு எப்படி மாறும் என்பது தெரிந்து கொள்ள முடியாது என்பது விஜயகாந்த் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.
ஆனாலும் நான் எந்த நிலைமையில் இருந்தாலும் என்னுடைய குணம் மாறாது என்பதை விஜயகாந்த் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்த் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் திரை உலகில் தனக்கான பெயரும் புகழையும் ஏற்படுத்திருக்கிறார்.இந்த அளவிற்கு தான் முன்னேற்றம் அடைந்தாலும் தான் எப்போதும் சாதாரண மனிதன் என்பதை அவர் அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் தான் அவரை பலரும் நடிகர் எம்ஜிஆருக்கு பிறகு அடுத்தபடியான கொடை வள்ளல் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்த்திடம் உதவி பெற்றவர்கள் ஏராளமானோர் இருக்கையில் அவரோடு நடித்த நடிகர்கள் பலரும் அவரைப் பற்றி பெருமையாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்த் வீட்டில் எப்போதும் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும் என்றும் பல பிரபலங்கள் கூறியிருக்கின்றனர்.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் ஆளுமை மிக்க தனித்தன்மை உள்ள நபராகவும் விளங்கி வருகிறார். தன்னோடு நடிப்பவர்களாக இருந்தாலும் சரி வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி சின்ன உதவி என்று கேட்டாலும் உடனே செய்து கொடுத்து, அந்த செயல் வெளியே தெரியாத வகையில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதனால்தான் அவர் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக அனைவருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் தற்போது அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தான் பலருக்கும் வருத்தம் தரும் விஷயமாக இருக்கிறது. அரசியலில் தன்னுடைய ஆளுமையை நிரூபித்த விஜய்காந்த் இனி அடுத்த முதல்வர் இவர் தான் என்று ரசிகர்கள் எண்ணி இருந்த நேரத்தில் அவருடைய வாழ்க்கையை உடல் நல பிரச்சனைகள் மொத்தமாக மாற்றி விட்டது.
இந்த நிலையில் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்த்தை அடிக்கடி திரை உலகை சார்ந்த பலரும் சந்தித்து வருகின்றனர். ஆனால் இந்த நிலைமையிலும் விஜயகாந்த் ஒரு நடிகரை பார்க்க வேண்டும் என்று கூறினாராம். அது வேறு யாருமில்லை பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் தானாம். இதைப் பற்றி பாவா லட்சுமணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதில் என்னை விஜயகாந்த் பார்க்க வேண்டும் என்று சொன்னார். நானும் அவரோட வீட்டுக்கு போனேன். அவரை பார்த்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கும்போது சவுத்ரி நல்லா இருக்கிறாரா? ஆபாவாணன் நல்லா இருக்கிறாரா? என பல திரைப்பட தயாரிப்பாளர்களின் பெயர்களைத்தான் கூறி நலம் விசாரித்துக் கொண்டிருந்தார் என்று பாபா லட்சுமணன் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் விஜயகாந்தை பற்றி பேசுகையில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்க்கு அடுத்தபடியா வயிறார சாப்பாடு போட்டவர் என்றால் அது விஜயகாந்த் தான். ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்கள் யாரும் அதை இன்றளவும் செய்யவில்லை என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் விஜயகாந்த் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications