கடைசி காலத்தில் ஆன்மீகத்தை தேடி சென்ற மனோபாலா..காரணம் இதுதானா?யாரும் அறிந்திடாத தகவல்கள்
சென்னை: நகைச்சுவை நடிகர் மனோபாலா உடல் நல குறைவு காரணமாக சற்று முன் காலமானார்.
அவருடைய மறைவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
மரணம் அடைந்த அவர் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் நடிகர் மனோபாலா பெரியார் முன்னிலையில் பூணூல் அறுத்து தீவிர நாத்திகவாதியாக மாறி பிறகு கடைசி காலத்தில் ஆன்மீக பயணத்தை தேடி சென்ற காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் மனோபாலா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பல முகங்களை கொண்டிருந்தார். இவர் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது கிளைமாக்ஸ் கட்சியின் போது பூணூல் மற்றும் சிலுவையை அறுக்கும் காட்சியை பாரதிராஜா வைத்ததை பார்த்து மிரண்டு போயிருக்கிறார். பிறகு பெரியார் முன்னிலையில் தானும் தனது பூணூல் அறுத்து தீவிர நாத்திகவாதியாக மாறினேன் என சில ஆண்டுகளுக்கு முன்பு youtube ஒன்றில் பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் சமீப காலமாக பா.ரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் சாதிய தீண்டாமைகளுக்கு எதிராக படங்களை இயக்குவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் வயது ஆக ஆக எதிர்காலத்தை பற்றிய பயம் வந்துவிட்டது. அதன் காரணமாக மீண்டும் ஆன்மீக பாதைக்கு திரும்பி விட்டேன் என்றும் இப்போ நான் போகாத கோயிலே இல்லை என மனோபாலா பேசியிருக்கிறார்.

கண்ணதாசன் எப்படி தீவிர ஆன்மீக பாதைக்கு மாறினாரோ, அதுபோல எனக்கும் ஒரு மூவ்மெண்ட் வந்த நிலையில் நானும் ஆன்மீக பக்கத்தில் சாய்ந்து விட்டேன். ஆனாலும் சாதி மத பாகுபாடுகளை ஒருபோதும் பார்க்க மாட்டேன். கஷ்டம் வரும் நேரத்தில் கடவுளை நினைத்துக் கொள்வேன். என்னைக்கும் காப்பாற்று, என்னை சுற்றி இருப்பவர்களையும் காப்பாற்று என்று மட்டும்தான் வேண்டிக் கொள்வேன் என அந்த பேட்டியில் மனோபாலா பேசியிருக்கிறார்.
தற்போது அவர் பேசிய இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சில நாட்களுக்கு முன்பு கடைசி ஆக வெளியிட்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அதிகமாக இவர் பக்தி மயமாக காட்சியளிக்கிறார். எப்படி இருந்த இவர் கடைசியில் இப்படி ஆகிவிட்டாரே என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications