விஜய் டிவியில் முடிவுக்கு வரும் 4 சீரியல்கள்..காரணம் இதுதானா? உங்களுக்கு பிடித்த சீரியலும் இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்கள் டிஆர்பி குறைவாகி விட்டதால் சில சீரியல்கள் முடிவடைய போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ராஜா ராணி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தொடர்ந்து மீண்டும் மேலும் மேலும் நான்கு சீரியல்கள் விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுந்தொடர்கள்
சின்னத்திரையில் நெடுந்தொடர்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்து வருகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒரு சேனல்களுக்கு என்று ரசிகர்கள் பெரும் அளவில் குவிந்து வருகின்றார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியும் இருந்து வருகிறது. இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பெரும்பாலும் பிற மொழிகளில் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களாக இருந்து வந்தாலும் இதுவும் தமிழில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. குறிப்பாக ராஜா ராணி போன்ற சீரியல்கள் கூட பிற மொழி தழுவல்களாக இருந்தாலும் தமிழிலும் இதற்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது.

ராஜா ராணி சீரியல்
அந்த வகையில் விஜய் டிவியில் நெடுந்தொடர்கள் பல ஒளிபரப்பாகி வருகிறது. அதில் திடீரென்று சில சீரியல்கள் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.. ராஜா ராணி சீரியல் கதாநாயகி அடிக்கடி மாறிக்கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் ஆலியா மானசா நடித்து வந்தார். அவரைத் தொடர்ந்து ரியா நடித்து வந்தார். தற்போது அவரே விலகி இருக்கும் நிலையில் ஆஷா கவுடா நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலின் டிஆர்பி குறைந்து இருப்பதால் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல்
அதைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவுக்கு வருவதாக செய்திகள் பரவி வருகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அண்ணன் தம்பிகள் தற்போது இந்த சீரியலில் பிரிந்து இருக்கின்றனர். மீண்டும் இவர்கள் அடுத்தடுத்த பிரச்சனைகளால் ஒன்று சேர்ந்ததும் கதை முடிவுக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு கதை இல்லாததால் தான் அடுத்தடுத்து மூன்று மருமகளும் கர்ப்பமாக இருந்தனர். தற்போது மீனாவும் ஏற்கனவே தனியாக இருக்கும் நிலையில், சீரியலின் முடிவில் அவரும் கர்ப்பமாக இருப்பது போன்று சீன்கள் வர இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல்
இந்த நிலையில் மேலும் இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் இப்போது பரவி வருகிறது. அதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலும் காற்றுக்கென்ன வேலை சீரியலும் தான். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் தான் செய்யாத தவறுக்காக தன்னை வீட்டில் அனைவரும் சந்திக்கப்பட்டு திட்டியதால் தன்னுடைய மனைவியை கூட்டிக்கொண்டு வெளியே வந்திருக்கிறார். இனி பிரச்சனைகளை சந்தித்து தன்னுடைய போராட்டத்தில் வெற்றி பெற்று, வீட்டில் உள்ளவர்கள் இவரிடம் மன்னிப்பு கேட்ட போது இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றுக்கென்ன வேலி சீரியல்
அதுபோல காற்றுக்கென்ன வேலி சீரியலும் 600 எபிசோடுகள் தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீரியலின் இறுதி கட்ட பிடிப்புகள் வேக வேகமாக நடந்து கொண்டு வருவதாகவும் சில புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே சீரியலில் ரசிகர்கள் பல வருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கும் இந்த சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு புதிய சீரியல்கள் கொண்டு வாங்க என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த தகவல்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் அதே நேரத்தில் இந்த சீரியல் இறுதியில் தீவிரமான ரசிகர்கள் சீரியல் முடிவு பற்றி வருத்தமாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலுக்கு பதிலாக எந்த சீரியலை எல்லாம் முடித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த சீரியலின் பெயர்களை கமெண்டில் தெரிவிக்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications