சூப்பர் ஸ்டார் குடும்பத்தோடு பார்க்கும் பிரபல தமிழ் சீரியல்.... வெளியான தகவலால் குஷியான ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் சூட்டிங் ஸ்பாட்டில் பேசியதை குறித்து அந்த சீரியலில் இயக்குனர் பகிர்ந்த தகவல்களை அந்த சீரியல் ரசிகர்கள் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

எத்தனையோ சீரியல்கள் வருடகணக்கில் ஒளிபரப்பாகி வந்தாலும், சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்களில் எதிர்நீச்சல் சீரியலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்பதை அந்த ரசிகர்கள் தினமும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து வரும் நேரத்தில்ம தற்போது அதற்கான அங்கீகாரம் கிடைக்க தொடங்கிவிட்டது என்று கொண்டாடி வருகிறார்கள்.

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் வரிசையில் இந்த சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக பெண்கள் தான் சீரியல்கள் பார்ப்பார்கள் என்ற காலம் மாறி இப்போது நல்ல கதைக்களத்தோடு இருந்தால் ஆண்களும் நாங்களும் பார்ப்போம் என்பதை எதிர்நீச்சல் சீரியல் மூலமாக நிரூபித்து இருக்கின்றனர். கையில் இருக்கும் ஃபோனில் எப்போதும் சீரியல் பார்த்து விடலாம் என்ற நிலை இருக்கையில் அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் ஒரு சில சீரியல்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு சீரியலில் மீண்டும் அடி எடுத்து வைத்திருக்கும் திருச்செல்வம் இயக்கம் சீரியல் இடம் பிடித்திருக்கிறது.

எதிர்நீச்சல் கதை

எதிர்நீச்சல் கதை

திருச்செல்வம் நடித்து இயக்கிய கோலங்கள் சீரியல் ஏழாவது வருட பாதியில்தான் முடிவடைந்தது. அதை தொடர்ந்து இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலும் அந்த இடத்தை பிடித்து விடும் என்பது அந்த சீரியலின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாய் இருந்து வருகிறது. மதுரையை மையமாக கொண்ட ஆதி குணசேகரனின் வீட்டில் படித்த பெண்களுக்கு ஏற்படும் அவமானங்களும், அடக்குமுறைகளும் தான் இந்த சீரியலின் கதையாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் நான்கு மருமகள் படித்திருந்தாலும் வீட்டிற்குள் சமையல் கட்டுக்குள் அடக்கி விடுகிறார்கள். இதை கடைசி மருமகள் ஜனனி எப்படி எதிர்கொண்டு எதிர்நீச்சல் அடித்து மீதம் இருக்கும் பெண்களையும் வாழ்க்கையில் துணிவோடு எதிர்நீச்சல் போட வைக்கிறார் என்பதை பற்றி கதை இருந்து வருகிறது.

பெண்களின் கருத்துக்கள்

பெண்களின் கருத்துக்கள்

கன்னட நடிகையான மதுமிதா இந்த சீரியலில் ஜனனியாக ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். இதுவரைக்கும் திரைப்படங்களில் பலரையும் மிரட்டி கொண்டிருந்த மாரிமுத்து இந்த சீரியலில் குணசேகரன் ஆக தத்ரூபமாக பொருந்தி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியல் கடந்த வாரத்தில் டிஆர்பி வரிசையில் டாப் இரண்டாவது இடத்தில் வந்திருக்கிறது. அதுவும் முதல் இடத்தில் இருக்கும் சீரியலில் விட ஒரு பாய்ண்ட் தான் கம்மியாக குறைவாக இருக்கிறது .இந்த நிலையில் இந்த சீரியலின் இயக்குனர், ஒரு பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் .அதில் இந்த சீரியலுக்கு பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் கூறும் கருத்துக்கள் என்ன என்பதை பற்றி அதில் விளக்கி இருக்கிறார். பல பெண்கள் இந்த சீரியலில் நடப்பது போல தங்களுக்கும் நடப்பதாகவும், இனி தாங்களும் சுயமாக முடிவெடுக்க இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு

நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு

அதுபோல ஒரு சில ஆண்கள் இந்த சீரியல் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் எங்கள் வீட்டில் இருக்கும் பெண்களும் இதே போல கேள்வியை கேட்டால் இனி நாங்கள் என்ன செய்வது என்று பயத்தோடு இருப்பதாகவும், அதே நிலையில் ஜெயிலர் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் திருச்செல்வதிதின் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில், "எங்கள் வீட்டில் இருப்பவர்களும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். என்று பகிர்ந்து இருந்தாராம்" ஏற்கனவே 2010ல் திருச்செல்வம் ரஜினிகாந்த் இடம் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக கதை கூறி இருக்கிறார். அப்போது அந்த திரைப்படத்தில் பெண் கேரக்டருக்கு அதிகமாக முக்கியத்துவம் இருப்பதால் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் கொண்டு வாருங்கள் நான் நடிக்கிறேன் என்று கூறி அனுப்பி இருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் வீட்டிலும் தன்னுடைய சீரியல் தொடர்ந்து பார்த்து வருவதை நினைத்து பெருமையாகவும் அவரே பாராட்டியதை குறித்து மகிழ்ச்சியாகவும் இருப்பதாக பகிர்ந்து இருக்கிறார். இந்த தகவல்களை எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+