படத்துல வாங்குற சம்பளம் சும்மா, சீரியலில் அதிகமாக சம்பாதிக்கும் ஐந்து பிரபலங்கள்.. முதல் இடத்தில்?
வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டே சீரியலில் நடிக்கும் நடிகர்களில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
சென்னை: சினிமாவை விட சீரியலில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஐந்து பிரபலங்களின் பெயர்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்கள் சினிமாவில் ஜொலித்துவிட்டு பிறகு சீரியலில் அறிமுகமாகி இருக்கின்றனர்
அந்த வகையில் சின்னத்திரையில் வந்து அதிகமான ரசிகர்களை கவர்ந்த நடிகர்கள் ஒரு சிலர்தான் இருக்கின்றனர்.
அதிகமான நடிகர்கள் சினிமாவில் இருந்து சீரியலுக்கு வருவதற்கு காரணம் இங்கு ஜூனியர் நடிகர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படுவதும் ஒன்றாக இருக்கிறது. அதில் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் ஐந்து நடிகர்களின் விவரங்கள் கீழே வருகிறது.

நடிகை அம்பிகா
வெள்ளித்திரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக பல வருடங்களாக டாப் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அம்பிகா 2021 ஆம் ஆண்டிலிருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த சீரியலுக்கு முன்பு இவர் ஒரு சில சீரியல்களில் சன் டிவியில் அறிமுகம் ஆகி இருந்தார். தற்போது அருவி சீரியலில் சரஸ்வதி என்ற கேரக்டரில் அம்பிகா நடித்து வருகிறார். தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கும் அம்பிகா படத்தில் வாங்கிய சம்பளத்தை விட தற்போது சீரியலில் அதிகமாக சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் ஒரு இந்த அருவி சீரியலில் நடிப்பதற்காக மட்டும் மாதத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் மாரிமுத்து
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வரும் மாரிமுத்து அந்த சீரியலில் கதாநாயகியை விட முக்கியமான கேரக்டராக இவர்தான் இருந்து வருகிறார் வெள்ளி திரையில் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அங்கு அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் இந்த ஒரே சீரியலின் மூலமாக கிடைத்துவிட்டது. பட்டி தொட்டி எல்லாம் தற்போது இவரை குணசேகரன் என்று அழைத்து வருகின்றனர். இவருடைய மிரட்டலான கேரக்டரில் "ஏ..இந்தாமா என்ன வேணும்.?" என்று ஒரே வார்த்தையால் தனி பாடி லாங்குவேஜால் பிரபலமாகி விட்டார். இந்த நிலையில் இவர் நிறைய படங்கள் இயக்கியும், நடித்து இருந்தாலும் அதையெல்லாம் விட சீரியலில் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் 35 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை சத்யபிரியா
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் கடுகடுவென இருக்கும் குணசேகரனின் அம்மாவாக சத்யபிரியா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் மருமகள்களை ஆட்டி வைக்கும் மாமியாராக நடித்திருக்கிறார். தன்னுடைய மாமியாருக்கு தான் ஒரு மருமகள் என்கிற நிலையை மறந்து தன்னுடைய மருமகள் தனக்கு அடிமைகள் என்கிற மாதிரி இவர் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு சில நாட்களாகவே மகன் குணசேகரனின் செயலால் கடுப்பாகி இருக்கிறார். இவரிடத்தில் சிறு மாற்றம் தெரிகிறது. இந்த நிலையில் இவர் இதற்கு முன்பு அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இப்போது தொடர்ந்து சீரியல் களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் இருபதாயிரம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் பப்லு
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கலக்கிய பப்லு பிரித்விராஜ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌதம் என்ற கேரக்டரில் கதாநாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் மற்ற நடிகர்களை விட இவர்தான் அதிக சம்பளம் வாங்குவதாகவும் ஒரு எபிசோடுக்கு குறைந்தது 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகை கனிஹா
நடிகை கனிஹா, அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்துவிட்டு தற்போது முதல் முறையாக சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். எதிர்நீச்சல் ஈஸ்வரியாக இப்போது ரசிகர்களின் மனதில் கவர்ந்திருக்கும் இவர் இந்த சீரியலில் எம்பிஏ படித்தும் படிக்காத குணசேகரிடம் மாட்டிக் கொண்டு கூண்டில் அடைத்த கிளி போல தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருப்பதாகவும் பலர் பாராட்டி வரும் நிலையில் இந்த சீரியலுக்காக இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் 12 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications