CWC மணிமேகலை Vs பிரியங்கா Vs மாகாபா ஆனந்த்! மூவரில் யாருக்கு சம்பளம் அதிகம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளர்களில் யார் அதிக ஊதியத்தை பெறுகிறார்கள் என்பது தெரியுமா, அதிலும் மாகாபா ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே, மணிமேகலை ஆகிய மூவரில் யாருக்கு ஊதியம் அதிகம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது, நீயா தானா, பிக்பாஸ், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், அண்டாகாகசும் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்த், பிரியங்கா, கோபிநாத், மணிமேகலை, ரக்ஷன் உள்ளிட்டோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

manimegalai priyanka despande


இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே அசத்தலாக பெர்ஃபார்ம் ஆகி வருகின்றன. இந்த நிலையில் விஜய் டிவி தொகுப்பாளர்களில் இவர்கள் அனைவருக்குமே ரசிகர்களின் பட்டாளம் இருக்கிறது.

இவர்களில் பெரும்பாலான ஆங்கர்கள் யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார்கள். அது போல் பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆளாளுக்கு ஒரு தனித்திறமை உண்டு என்பதால்தான் இன்னமும் இந்த நிகழ்ச்சிகளில் நீடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் டிவிக்கு கண்ணு பட்டுவிட்டது போல் ஆங்கர்கள் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மணிமேகலை குக் வித் கோமாளியின் 4 சீசன்களிலும் கோமாளியாக வந்தவர். இந்த 5-ஆவது சீசனில் மணிமேகலை, ரக்ஷனுடன் இணைந்து ஆங்கரிங் செய்தார்.

இதைத் தொடர்ந்து மற்ற ஷோக்களில் ஆங்கரான பிரியங்கா, இந்த சீசனில் குக்காக கலந்து கொண்டார். ஆனால் அவர் வந்ததிலிருந்து மணிமேகலையை தனது ஆங்கரிங் வேலையை செய்ய விடாமல் பிரியங்காவே ஸ்கோர் செய்து வருகிறார். மணிமேகலை என்றில்லை யார் வாயை திறந்தாலும் உடனே தனது அதிக சப்தத்துடனான குரலால் பிரியங்கா மூக்கை நுழைத்துவிடுகிறார் என்பதுதான் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும் ஷோவை ஓட்டுவதற்காக ராமருடன் காதல் போல் நடிப்பது போன்ற பிரியங்காவின் செயல்பாடுகள் மக்கள் மனதில் முகம் சுளிக்க வைத்தன. இந்த நிலையில் மணிமேகலை, தன்னை ஆங்கரிங் செய்ய விடுங்கள் என பல முறை கூறிய நிலையில் பிரியங்கா அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் மணிமேகலையின் ஆங்கரிங்கில் தலையிட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பிரியங்கா குறித்து நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்திடம் மணிமேகலை கூறியிருந்த நிலையில் இதை எப்படியோ பிரியங்கா அறிந்து கொண்டு குக் வித் கோமாளி நடந்த போது வெளியே சென்று தனது கேரவனில் உட்கார்ந்துவிட்டார். அவரை சமாதானப்படுத்திய போது மணிமேகலை என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் வருவேன் என பிடிவாதம் பிடித்திருக்கிறார்.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம், மணிமேகலையை மன்னிப்பு கேட்க சொன்ன போது அவர் மறுத்துவிட்டு ஷோவை விட்டு வெளியேறிவிட்டார். எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த ஷோவில் நான் ஆங்கரிங் செய்ய மாட்டேன் என தெரிவித்துவிட்டார். இதனால் யார் மீது தவறு என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

விஜய் டிவியும் ஆங்கரிங் என்றாலே பிரியங்கா , மா.கா.பா. ஆனந்த் ஆகியோரைத்தான் அழைக்கிறது என விமர்சனமும் உண்டு. இந்த நிலையில் விஜய் டிவி தொகுப்பாளர்களின் ஊதியம் என்னவென்பதை தெரிந்து கொள்வோம். நீயா நானா நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத், ஒரு எபிசோடுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுவதாக சொல்லப்படுகிறது.

அது போல் மா.கா.பா. ஆனந்திற்கும் பிரியங்காவிற்கும் ஒரு எபிசோடிற்கு தலா ரூ 2.50 லட்சம் கொடுக்கப்படுகிறது. ரக்ஷனுக்கு ரூ 1 லட்சமும் , மணிமேகலைக்கு ரூ 60 ஆயிரம் முதல் ரூ 1 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது. இது போதாமல் இவர்கள் தங்கள் சமூகவலைதளங்கள் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+