குக் வித் கோமாளி சீசன் 5.. வெங்கடேஷ் பட் விலகியதால் தாமுவுக்கு ஜோடி இவர்தானா? அட இத்தனை குழப்பங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் தான் இந்த சீசனில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதால் செஃப் தாமுக்கு துணையாக யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கினாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் அலப்பறை மற்றும் நடுவர்கள் கொடுக்கும் க்யூட்டான ரியாக்சன் பார்ப்பதற்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நான்கு சீசன்களாக பார்த்து வருகின்றனர்.

who is going to join Chef Thamu in Cook with Comali season 5

இந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிற மாதிரி இப்போது அடுத்த அடுத்த பல செய்திகள் வெளியாகி வருகிறது. அதில் திடீரென்று வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் விலகப் போவதாகவும் அதோடு தன்னோடு செப் தாமுவும் வந்துவிடுவார் என்றும் கூறியிருந்தார்.

பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார். அதோடு நண்பன் சொன்ன வார்த்தை மாறினாலும் அவர்கள் மீது வைத்திருக்கும் நட்பு மாறாது என்று ஒரு பதிவும் வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதுபோல விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மெட்டா மிஷன் 10 நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த நிறுவனம்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தயாரித்து வருகிறது.

தற்போது விஜய் டிவியில் இருந்து அந்த நிறுவனமும் விலகுவதாக அறிவித்து இருந்தது. இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பார்த்திபனும் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், சில குட்பாய் ரொம்பவே கடினம். நிறைய நினைவுகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். இது எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல... கடந்த நான்கு சீசன்களும் ஒரு குடும்பமாக இருந்த நினைவுகள் மறக்க முடியாது. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசீர்வாதத்துக்கும் என்றென்றைக்கும் நான் நல்ல நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இப்படியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் என அடுத்தடுத்து எல்லோரும் விலகி இருப்பது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடருமா? பழைய கோமாளிகள் இந்த சீசனில் கலந்து கொள்வார்களா? என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது .

அதே நேரத்தில் மேட்டா மிஷின் நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் இடையில் என்ன பிரச்சனை என்பது யாருக்கும் தெரியவில்லை. அது போல இனி அதிகாரப்படி சீசன் எப்படி வரப்போகிறது ஜட்ஜ்கள் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியானதால் தான் கூற முடியும் என்றும் இந்த நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் தாமு இந்த சீசனிலும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அதோடு அவரோடு இன்னொரு நடுவராக நடிகர் சுரேஷ் இணைவார் என்று கூறப்படுகிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக ஜெகன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால் பொருத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+