"ஒரு கோடிப்பே.." சர்வைவரில் ஜெயிக்கப்போவது யாரு??
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியில் ஜெயிக்கப்போவது யாரு என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு கூடியுள்ளது.
கிராண்ட் பைனலில் இருக்கும் நான்கு போட்டியாளர்களை விடவும் ரசிகர்கள் ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.
ஒரு கோடியை தூக்கி செல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்று ரசிகர்களின் மத்தியில் பஞ்சாயத்து தொடங்கியுள்ளது.

ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோ
ஜீ தமிழில் முதல்முறையாக பெரிய அளவில் ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டு உள்ளது. இது வரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் சர்வைவர் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் ஆரம்பம் முதலே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆக்ஷன் கிங் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். இவருடைய மிரட்டலான பெர்பாமன்ஸ் பார்ப்பதற்காகவே இவருடைய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கியுள்ளனர்.

அதிரவைக்கும் டாஸ்க்கள்
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களம் இறங்க பட்டனர். அவர்களில் காடர்கள், வேடர்கள் என இரண்டு அணியாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு விளையாட்டு தொடங்கப்பட்டது. முதல் நாளே மூச்சு பிடிக்க வைக்கும் வகையில், தண்ணீரில் தத்தளிக்க விட்டு விட்டனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் ஹெவியாக இருந்ததால் ரியாலிட்டி ஷோ என்றால் இதுதான் என்று பல ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் எதிர்பார்க்காத பல வெளியேற்றுங்கள் ரசிகர்களை சில நேரங்களில் வெறுப்படையவும் செய்துள்ளது.

நினைத்தது போல இல்லையே! !
இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டு என்ட்ரி ஆக வனசா மற்றும் இனிகோ களமிறங்கி இருந்தனர். இவர்களின் வருகையால் இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரசியம் கூடியிருந்தது. ஏற்கனவே அவர்கள் அணியில் இருந்தவர்கள் நாட்கள் செல்ல செல்ல வேடர்கள் அணிக்கும், வேடர்கள் அணியில் இருந்தவர்கள் காடர்கள் அணிக்கும் மாற்றப்பட்டனர். இதனால் போட்டியாளர்களுக்கு பல கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டது. ஒரு சில போட்டியாளர்கள் தாங்கள் நினைத்தது போல இந்த நிகழ்ச்சி இல்லை என்று மனம் உருகி கூறிவந்தனர்.

ஒரு கோடி யாருக்கு?
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு போட்டியாளர்கள் பலர் வெளியேறி இருந்தாலும் தற்போது இறுதி சுற்றில் விஜி, வனசா, உமாபதி, சரண் ஆகிய 4 பேரும் இருந்து வருகின்றனர். இதில் யார் அந்த டைட்டில் வின்னர் என்றுதான் ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பலர் இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது. இதில் டைட்டில் வின்னர் ஆக விஜிதான் வந்துள்ளார் என்று கூறிவருகின்றனர். அப்படி என்றால் ஒரு கோடியை தூக்கி செல்லும் அதிர்ஷ்டசாலி அவர் தானா??என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் எதையும் இப்போது சொல்ல முடியாது நாளை ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்தால் முடிவு தெரிந்துவிடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு கோடி பரிசுத் தொகையை மொத்தமாக சொந்தமாக்கிக் கொள்ளும் நபர் யார் என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications