லக்கி பாஸ்கர் படத்தில் வரும் ஹர்ஷத் மேத்தா யார் தெரியுமா? ஒரு நாளிதழ் செய்தியால் உடைந்த சாம்ராஜ்யம்
சென்னை: 1992-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்த ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை மோசடி பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த மோசடிக்கதை Hansal Mehta இயக்கிய Scam 1992: The Harshad Mehta Story என்ற தொடர் மூலம் பெரிதும் பிரபலமாகியது. இதே கதை அடிப்படையில் வெங்கி அத்துலூரி இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம், ஒரு சாதாரண மிடில் கிளாஸை சேர்ந்த கதாநாயகன் துல்கர் சல்மான், வாழ்க்கை, மோசடியில் அடியெடுத்து வைத்துப் பின் எப்படி திருப்பமடைகிறது என்பதை விளக்குகிறது.
பாஸ்கர் குமார், மும்பையில் ஒரு நடுத்தர வாழ்க்கை வாழும் குடும்பஸ்தராக கதை ஆரம்பிக்கிறது. தனது மகனுக்கு கூடுதலாக ஒரு வடா பாவ் வாங்கி கொடுக்க கூட காசில்லாத நிலையில்தான் பாஸ்கர் இருக்கிறார். வங்கியிலும் மேலதிகாரிகளால் நன்கு ஏமாற்றப்படுகிறார். இந்த நிலையில்தான், மகதா வங்கி கிளையின் உதவி மேலாளராக இருந்தபோது, பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். சிபிஐ அதிகாரி லக்ஷ்மண ராவ், பாஸ்கரின் கணக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதை கண்டுபிடித்தது அதிர்ந்து போகிறார். இப்படியாக போகும் கதையில் ஹீரோ பார்வையில் நடக்கும் ட்விஸ்ட் மற்றும் டர்னிங்குகள் கதையோடு ரசிகர்களை இறுக்கிப்பிடித்து உட்கார வைத்துவிடுகின்றது.

இந்த படத்தில் ஹர்ஷா மேஹ்ரா என்று உருவகப்படுத்தப்பட்டுள்ள கதாப்பாத்திரம் வேறு யாருமல்ல, பங்குச் சந்தை மோசடி மன்னன் ஹர்ஷா மேத்தாதான்.
1992 ஆம் ஆண்டின் மோசடியானது இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம். ஹர்ஷத் மேத்தா மற்றும் அவருடன் தொடர்புடைய வங்கி மற்றும் அரசியல் பிரமுகர்கள் மும்பை பங்குச் சந்தையை (BSE) போலியாக ஆட்டு வித்தனர் என்பதுதான் மோசடியின் மையம். சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த மோசடி இந்தியாவின் நிதி அமைப்பையே உலுக்கிவிட்டது.
'பிக் புல்' என அழைக்கப்படும் ஹர்ஷத் மேத்தா, அப்படி என்ன செய்தார்? ஹர்ஷத் மேத்தா, பங்குச் சந்தையில் போலியான ட்ரெண்ட்டை உருவாக்க நிறைய பங்குகளை மொத்தமாக வாங்கினார். அதற்கு பெரிய அளவுக்கு பணம் தேவைப்படும் என்பதால், வங்கிகளின் போலி BRகளை தயாரித்து பணத்தை பெற்றுக்கொண்டார். இதில் வங்கி அதிகாரிகளும் உடந்தை

தன்னிடமுள்ள பணத்தை வைத்து பங்குகளின் மதிப்புகளை 40% வரை கூடியதுபோல காட்டி, முதலீட்டாளர்களை நம்ப வைத்து அந்த பங்குகளை வாங்க வைப்பார். நல்ல லாபம் வரும் என தெரியும்போது விற்பனை செய்துவிடுவார். ஆக மொத்தம் அவர் விருப்பப்படி பங்குச் சந்தை நடனமாடிக்கொண்டிருந்த காலம் அது. ஏசிஸி (ACC) பங்குகளை ₹200ல் இருந்து ₹9,000 வரை உயர்த்தியதன் மூலம் பங்குச் சந்தையில் புயலையே வீச வைத்தார்.
இந்த மோசடியை வெளிக்கொண்டு வந்தது ஒரு ஊடகச் செய்தி. 1992 ஏப்ரல் 23 ஆம் தேதி, சுசேதா தலால் என்ற பத்திரிகையாளர் Times of India நாளேட்டில் இதை வெளிப்படுத்தினார். மெஹ்தா வங்கிகளின் முறையை தவறாக பயன்படுத்தி சந்தையை ஏமாற்றியதைச் சுட்டிக்காட்டினார். உலகமே அதிர்ந்து போனது. பத்திரிக்கையில் வெளியான அந்த ஒற்றை செய்தி, இந்தியாவின் நிதி அமைப்பையே தலைகீழாக புரட்டிப் போட்டது. முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெறுவதற்கு பிற்காலத்தில் கடும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்க விதை போட்டதும் அந்த ஒரு செய்திதான்.
இந்த மோசடி பற்றிய செய்தி வெளியானதும், Sensex 4,500 புள்ளிகளில் இருந்தது 1,000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது. வங்கிகள் மற்றும் பங்குச் சந்தை இடையே மோசடி தொடர்புகள் எப்படி இருந்தன என்பது அம்பலமானது. இதன்பிறகுதான், Securities and Exchange Board of India (SEBI) அமைப்பை மேம்படுத்தி பல புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. ஹர்ஷத் மேத்தாவின் மோசடி, இந்திய நிதி அமைப்பின் குறைகளை வெளிக்கொணர்ந்ததோடு, அதை பலப்படுத்த முக்கிய காரணமாகவும் அமைந்தது. ஹர்ஷத் மேத்தா 1992, நவம்பர் 9 அன்று மத்திய புலனாய்வு அமைப்பால் (சிபிஐ) கைது செய்யப்பட்டார். 2001ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, சிறையில் இருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 47. இந்திய பொருளாதாரத்தையே தனது கிரிமினல் மூளையால் ஆட்டு வித்த ஹர்ஷத் மேத்தாவின் இளமைக் காலம் சிறையில் கழிந்தது. மேலும், சீக்கிரமே உலகை விட்டும் கிளம்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கதையை, லக்கி பாஸ்கர் மிக எளிதாக, ஈஸியான திரைக்கதை மூலம் புரிய வைத்துவிட்டது. ஹீரோவின் பார்வையில் இந்த மோசடியும் கதையோடு மிக்ஸ் ஆவதால், சாமானிய மக்களுக்கும் ஈஸியாக புரியும் வகையில் திரைக்கதையை சஅமைத்து சபாஷ் வாங்கியுள்ளார் இயக்குநர் வெங்கி அத்துலூரி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications