ஜனனியின் காதலன் பற்றி உண்மையை சொன்ன தோழி... பரவி வரும் வதந்திகளுக்கு இதுதான் பதிலாம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் ஜனனியை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு அவருடைய தோழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஜனனி அமுதவாணையுடன் பழகி வருவதை பலரும் அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஜனனியின் தோழிகள் வெளியிட்ட வீடியோ பலருக்கும் தெளிவை கொடுத்திருக்கிறது.

வாழ்க்கை லட்சியம்
ஒருவர் பிரபலமாகாத வரைக்கும் அவரை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் அடிமட்டத்திலிருந்து முன்னேறி மேலே வந்து கொண்டிருந்தால் அவரைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியாகும். அதுபோல தான் தற்போது ஜனனிக்கும் நடைபெற்று இருக்கிறது .அதை குறித்து அவருடைய தோழி கருத்துக்களை கூறியிருக்கிறார். என்னதான் சிரித்து பேசி ஜாலியாக குழந்தைத்தனமாக இருந்தாலும் ஜனனிக்குள் இப்படி ஒரு வேகமும் லட்சியமும் இருக்கிறதா? என்று கேட்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

முதல் நாளே ரசிகர்கள் ஆதரவு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பலதரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் . நடிகர்கள், தொகுப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ,பாடகர்கள் ,செய்தி வாசிப்பாளர்கள், இந்த முறை மக்களில் ஒருவர் என பலர் கலந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து செய்தி வாசிப்பாளராக இந்த நிகழ்ச்சிக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார் ஜனனி. அவரைப் பற்றிய செய்திகளை ரசிகர்கள் பலர் சர்ச் செய்து தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர் ஆரம்பமான முதல் நாளே அவருக்கு அதிகமான ஃபேன்ஸ் பேஜ்ஜுகள் தொடங்கப்பட்டது.

தேவையில்லாத பிரச்சனையில் சிக்கல்
இதற்கு முந்தைய சீசனில் இலங்கையில் இருந்து வந்த லாஸ்லியாக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகும் போது அவருக்கு அதிகமான ஃபேன்ஸ் பேஜ்கள் இருந்தது. அதுபோல தற்போது ஜனனிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணனுடன் சேர்ந்து ஜனனி விளையாடி வருவதாகவும் அமுதவாணனின் பேச்சைதான் ஜனனி கேட்டு வருகிறார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .தற்போது விக்ரம் மீது அமுதவாணன் கோபத்தில் இருப்பதால் அவர் பிரச்சனை செய்யும் போது அதில் ஜனனியும் மாட்டிக்கொண்டு உள்ளார். அதுமட்டுமல்லாமல் அமுதவாணன் மற்றும் ஜனனி இருவரும் நெருங்கி பேசி பழகி வருவதால் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டிருக்குமோ என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை
கடந்த வாரம் போட்டியாளர்கள் பலரும் ஜனனி அமுதவனுடன் சேர்ந்து விளையாடி வருவதால் அவரை நாமினேஷன் செய்த நிலையில் தற்போது அமுதவாணன் அவரிடம் இருந்து விலகி இருக்க தொடங்கி இருக்கிறார் ஆனாலும் நீங்கள் என்னுடன் சேர்ந்தால் விக்ரமன் உங்களை பகடைக்காயாக பயன்படுத்தி என்னை திட்டுவதாக உங்களைத் திட்டிக் கொண்டிருப்பார் எதற்கு உங்களுக்கு வேண்டாத வேலை என்று அட்வைஸ் கொடுக்கிறார், இதையும் தாண்டி ரசிகர்கள் பலரும் ஜனனி ஒருவரை காதலிக்கிறாரா? அவர் இலங்கையை சேர்ந்தவரா? அல்லது தமிழரா? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதைக் குறித்து அவருடைய தோழி ஒருவர் ஜனனி சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்பது ஆசை. அதுபோல மாடலிங்கிலும் ஜெயிக்க வேண்டும் என்பது ஆசை அதற்காக இவர் பல முயற்சிகளை சின்ன வயதில் இருந்து எடுத்து வருகிறார். அதற்கு அவருக்கு டைம் பத்த மாட்டேன் என்கிறது, அதில் எப்படியாவது ஜெயிக்கணும் என்று போராடிக் கொண்டிருக்கிறார் .அப்படி இருக்கும்போது இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் ஜனனிக்கு ஈடுபாடு கிடையாது .அதுபோல இதுல எல்லாம் அவருக்கு டைம் வேஸ்ட் பண்ணுவதற்கு டைமும் கிடையாது தொடர்ந்து ரசிகர்களும் சப்போர்ட் பண்ணுங்க, நாங்களும் பண்ணுகிறோம். அவள் அவளுடைய லட்சியத்தை அடைய வேண்டும் அதுதான் எங்களுடைய ஆசை என்று கூறி இருக்கிறார்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications