குணா படம் உருவானபோது ஏற்பட்ட அடிதடி.. கமல் படங்களில் ஜனகராஜ் நடிக்காமல் போனதற்கு காரணம் இவங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்த குணா திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து குணா திரைப்படத்தைப் பற்றியும் பலரும் இணையத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஜனகராஜ் ஆரம்ப காலகட்டத்தில் கமலோடு அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் இதே குணா திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் கமல்ஹாசனோடு நடிப்பதையே நிறுத்திக் கொண்டார் என்று குணா திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருந்த அழகப்பன் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

who is reason janagaraj fight during guna movie

அந்த வகையில் இயக்குனர் ராசி அழகப்பன் குணா திரைப்பட அனுபவங்களை பற்றி பேசும்போது மிக நெருங்கியவர்களில் நட்பு ஒரு சின்ன வார்த்தையில் முறிந்து போய்விடக் கூடியது தான் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு உதாரணமாக, நடிகர் ஜனகராஜ் கமல்ஹாசன் நட்பை குறித்து பேசி இருக்கிறார்.

அதில் ஜனகராஜ் தன்னை ஆங்கில படங்களை பார்த்து வளர்த்துக் கொண்டவர். அவர் ஒரு ஹிஸ்டாரிஸ்டும் கூட... அது போல கமல் சார் ஜனகராஜ் எல்லோரும் ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்தது. எல்லோரும் கிரிக்கெட் எல்லாம் கூட விளையாடி இருக்கிறார்கள். அந்த நட்பின் வாயிலாக இவர்களுக்கு அறிமுகமானவர்தான் சந்தான பாரதி.

குணா படத்தில் டப்பிங் ஏவிஎம் கார்டன் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது அப்போது நான் ஜனகராஜ் டப்பிங் பேசுவதற்காக டயலாக் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் பின்னால் சந்தான பாரதியும், ஆர்எஸ் சிவாஜியும் இருந்தார்கள். ஒரு டயலாக்கை ஜனகராஜ் பேசும்போது நான் அதை ஓகே செய்து விட்டேன். ஆனால் ஆர் எஸ் சிவாஜி ஒன் மோர் கேட்டார். ஆனால் நான் ஓகே சொன்னதால் ஜனகராஜ் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் ஆர் எஸ் சிவாஜி இல்லை இல்லை மறுபடியும் பேச வேண்டும் என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இதில் ஒரு தடித்த வார்த்தை ஒன்று வந்துவிட்டது. இதனால் ஜனகராஜ் கோவப்பட்டு வெளியே வர அவரை நோக்கி வந்த ஆர் எஸ் சிவாஜி ஜனகராஜை அடித்துவிட்டார். அவரோடு சந்தான பாரதியும் சேர்ந்து கொண்டதால் ஜனகராஜ் அங்கிருந்து ஓடிப்போய்விட்டார்.

இந்த தகவல் கமலூசாருக்கு தெரிய வந்தது. இதைக்கேட்டு கமல் சார் மிகவும் வருத்தப்பட்டார். அந்த பிரச்சனை யூனியன் பிரச்சனையாக மாறியது. பிறகு சங்கத்திற்கு சென்று ஒரு வழியாக இந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது. ஆனால் ஜனகராஜ் தன்னோடு ராசி அழகப்பன் இருந்தால் மட்டும்தான் நான் பேசுவேன் வேறு யாரு இருந்தாலும் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

நாங்களும் அதற்கு சரி என்று சம்மதித்த பிறகு மீதமுள்ள டப்பிங் பேசி முடித்து இருந்தார். ஆனால் கமல் சாருக்கு இது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு கமல் சார் திரைப்படங்களில் ஜனகராஜ் இல்லாமல் போய்விட்டார் என்று அழகப்பன் கூறி இருந்தார். அதுபோல தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர் தான் ஜனகராஜ்.

1978 ஆம் ஆண்டு வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படம் மூலமாக சினிமாவில் நடிப்பை தொடங்கிய ஜனகராஜ் அதற்குப் பிறகு கமல், ரஜினி என்று முன்னணி நடிகர்களோடு நடித்திருந்தார். அதிலும் ரஜினியோடு வீரா, பாட்ஷா, அருணாச்சலம், அண்ணாமலை, படிக்காதவன் என்று பல படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி இப்ப வரைக்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நாயகன் திரைப்படத்திலும் கமலும் ஜனகராஜ் அவ்வளவு நட்பாக நடித்திருப்பார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக சினிமாவில் ஜனகராஜ் நடிப்பது குறைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+