கனா காணும் காலங்கள் தீபிகாவின் காதலர் இவர் தானா?5 நாளில் திருமணமாம்..திடீர் ட்விஸ்ட்
சென்னை: கனா காணும் காலங்கள் அபி தனக்கு என்னும் ஐந்து நாளில் திருமணம் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இப்ப வரைக்கும் யாரை காதலிக்கிறார் என்று கூறாத தீபிகா instagramல் ஹிண்டு கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய திருமண நாள் நெருங்கும் நிலையில் தனக்கு சொல்ல முடியாத வகையில் மனநிலையில் இருப்பதாக கூறி இருக்கிறார்.

தீபிகா வெங்கடாசலம் ஒரு சமூக வலைத்தள பக்கத்தில் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் செயலியின் மூலமாக பிரபலம் அடைந்தவர். அதன் மூலமாகத்தான் அவருக்கு கனா காணும் காலங்கள் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இந்த சீரியலில் அபி கேரக்டரில் நடித்து வரும் தீபிகா சமீபத்தில் தான் ஒரு நபரை காதலித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். ஏற்கனவே ஒரு நபரை காதலித்து வந்தேன். ஆனால் அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஆனால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அதற்கு பிறகு என் கூடவே இருக்கும் என் நண்பர் தான் என்னை புரிந்து கொண்டார். பிறகு இருவரும் பிடித்திருப்பதாக கூறிக் கொண்டோம்.

ஏற்கனவே எனக்கும் வீட்டில் திருமணம் மையத்தின் மூலமாக திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தனர். அது போல என்னுடைய நண்பருக்கும் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் நாம் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டேன். என்று கூறியிருந்தார். ஆனால் கடைசி வரைக்கும் தான் யாரை காதலிறார் தனது யாரை திருமணம் செய்ய போகிறார் என்ற ரகசியத்தை மட்டும் கூறாமல் மறைமுகமாக வைத்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு அடிக்கடி அவர்களோடு தன்னுடைய கஷ்டங்கள் எல்லாத்தையும் பகிர்ந்து வரும் தீபிகா தற்போது சில ஹிண்ட் கொடுத்து வந்தார். அதன் அடிப்படையில் பலரும் அப்போ அது கனாக்காணும் காலங்கள் சீரியலில் தீபிகாவோடு நடிக்கும் ராஜா வெற்றி பிரபு தானா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அதற்கு இல்லை ஆமாம் என்று எதுவும் தீபிகா கூறவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று லைவில் தனக்கு இன்னும் ஐந்து நாளில் திருமணம் என்றும், திருமணம் நாள் நெருங்க நெருங்க தனக்கு மனதுக்குள் ஒரு பதட்டமும் சந்தோஷமும் ஏற்படுகிறது என்றும், இப்படித்தான் எல்லா பெண்களுக்கும் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு என்னால் வித்தியாசமாக இருக்கிறது என்று உணர்வுபூர்வமாக கூறியிருந்தால் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
