இந்த 4 பேரில் ஒருவர் தான் அடுத்த குணசேகரன்.. ஆனால் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? இப்படியும் கூடவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு காலமானார்.
மாரிமுத்து காலமாகி ஒரு வாரம் ஆனாலும் ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராமல் தவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியல் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் இனி யார் அடுத்த குணசேகரன் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

அந்த வகையில் ஒரு சில நடிகர்களின் பெயர் சமூக வலைத்தளத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல ஒரு சிலரிடம் சேனல் தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் சமீப காலமாகவே அதிகமான ரசிகர்களால் உச்சரிக்கப்படும் சீரியலின் பெயர்தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பெரிய அளவில் புரட்சி செய்து கொண்டுதான் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக பெண்கள் மட்டும் தான் சீரியல் பார்ப்பவர்கள் என்ற கருத்தை உடைத்து இந்த சீரியல் ஆண்களையும் 2கே கிட்ஸ்களையும் கூட தொடர்ச்சியாக சீரியல் பார்க்க தூண்டி இருக்கிறது.

அத்தனை பெரிய வெற்றிக்கு காரணம் இந்த சீரியலில் இயக்குனர் மற்றும் கதை ஆசிரியர் என்று சொன்னாலும் சீரியலுக்கு முதுகெலும்பாய் இருந்தது குணசேகரன் கேரக்டர் தான். இந்த கேரக்டரில் நடிகர் மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பு பலருடைய மனதையும் கவர்ந்தது. வில்லன் என்ற கதாபாத்திரத்தையும் தாண்டி அனைவருடைய வீட்டிற்குள்ளோ ஒரு நபராகவே குணசேகரன் மாறிவிட்டார்.
பொதுவாக சினிமாவாக இருந்தாலும் சரி சீரியல் ஆக இருந்தாலும் சரி வில்லன் தோற்க வேண்டும், கஷ்டப்பட வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக இந்த சீரியலில் குணசேகரன் தோற்கும் போது அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி இருந்தனர். அதாவது கடந்து சில தினங்களுக்கு முன்பு ஜீவானந்தம் அப்பத்தாவில் 40% சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றி இருந்தார்.

அதை கேட்டு பிரச்சனை செய்யப் போன குணசேகரனை அவருடைய கம்பெனியில் இருந்து குண்டு கட்டாக தூக்கி வெளியே போட்டு இருந்தார். அந்த நேரத்தில் அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி எங்க தலைவன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். இப்படியாக அதிகமான வரவேற்பு பெற்ற குணசேகரின் கேரக்டரில் இருந்த மாரிமுத்து திடீரென்று காலமானதால் அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரன் கேரக்டரில் எந்த நடிகர் வந்தாலும் மாரிமுத்துவின் நடிப்பிற்கு நிகர் செய்ய முடியாது என்பதும் அசைக்க முடியாத உண்மை தான்.
இந்த நிலையில் பல பேர் மனதை கவர்ந்த இந்த சீரியலை இனி மாரிமுத்து இல்லை என்பதற்காக நிறுத்தி வைக்கவும் முடியாது. இந்த சீரியலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் குணசேகரன் கேரக்டரில் நடிப்பதற்காக பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் குணசேகரன் இறந்த அன்று அவருடைய கேரக்டருக்கு வேல ராமமூர்த்தி சரியாக இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதுபோல சேனல் தரப்பில் இருந்தும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்தது.
ஆனால் அவர் தான் இப்போது பிஸியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 20 நாளைக்கு மேல தான் என்னவென்று சொல்ல முடியும் என்று வெளிப்படையாகவே சொல்லி இருந்தார். இதனாலே அவரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி இடமும் குணசேகரன் கேரக்டருக்காக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. அது போல நடிகர் இளவரசு மற்றும் நடிகர் பசுபதி இடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் இவர்கள் நான்கு பேரில் ஒருவர் நடித்தால் சீரியல் நன்றாக இருக்கும் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

அதே நேரத்தில் நடிகர் ராதாரவி நடித்தால் ஈஸ்வரிக்கும் ராதா ரவிக்கும் எத்தனை வயது வித்தியாசம் இருக்கும் என்பது பலரும் யோசிக்க தவறிவிட்டார்கள் போல. ஆனால் அதுவே சீரியலில் நடிகர் ராதாரவி மற்றும் கனிகாவின் ஜோடி பொருத்தம் வரும்போது தான் பலரும் இதைக் குறித்து கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பது உண்மை. அதே நேரத்தில் நடிகர் ராதாரவி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குணசேகரன் கேரக்டரில் அவர் நடித்தால் ஈஸ்வரிக்கு சரியான ஜோடி பொருத்தமாக இருக்காது என்பது பலருடைய கருத்து.
அதுபோல இளவரசு பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும், காமெடியனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவரும் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார். ஆனால் சமீப காலமாகவே இவர் காமெடியான கேரக்டரில் நடித்து வருகிறார். இதனால் இவர் இந்த சீரியலில் வரும் போது அவருக்கு குணசேகரனின் கெத்து வருமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் பல படங்களில் வில்லனாக மிரட்டியவருக்கு இதுவெல்லாம் அத்துபிடி தான்.

அதுபோல நடிகர் பசுபதி இடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பசுபதி இந்த கேரக்டரில் நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்பது பலருடைய கருத்து. அதுபோல அவர் நடிகை கனிகாவுக்கும் பொருத்தமாக இருப்பார். ஆனால் அவர் அதிகப்படியான திரைப்படங்களில் நடிப்பதால் இந்த சீரியலில் தொடர்ச்சியாக நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் இந்த சீரியல் குறைந்தது 5 வருடங்களாவது ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இவர் நடித்தால் தொடர்ச்சியாக இந்த சீரியலில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
குணசேகரன் கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கு என்று பலருக்கும் இப்போது தெரியும். அந்த வகையில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் குணசேகரன் உறுதி ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அதிகமான வாய்ப்பு நடிகர் பசுபதிக்கு தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால் தெரியும். அது வரை பொறுத்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications