எதிர்நீச்சல் சீரியலில் தெறிக்கவிடும் வசனங்களை எழுதுவது யார் தெரியுமா? பிரபலமான நடிகை தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது பட்டயை கிளப்பும் பல வசனங்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகின்றது .அதை எழுதுவது யார் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் தோன்றி கொண்டிருக்கும்போது அந்த சீரியலின் ஸ்கிரிப்ட் ரைட்டராக இருப்பது சின்னத்திரையை சார்ந்த ஸ்ரீ வித்யாதானம்.

இதுவரைக்கும் அமைதியாக இருந்த அப்பத்தா தற்போது "பட்டமாள் எம் ஏ" என்று மாஸாக அனல் பறக்கும் டயலாக் பேசி வருவதாக கூறி வரும் ரசிகர்களுக்கு அதற்கு காரணம் சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது வசன எழுத்தாளராக இருக்கும் ஸ்ரீ வித்யா தானாம்.

கோலங்கள் ஆர்த்தி

கோலங்கள் ஆர்த்தி

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் ஆர்த்தி கேரக்டரில் நடித்த நடிகை தான் ஸ்ரீவித்யா. இவர் நடிப்புக்கு வருவதற்கு முன்பே படிப்பில் கெட்டிக்காரியாக இருந்திருக்கிறார். அதோடு நடனமும் இவருக்கு கைவந்த கலை தானாம். ஆனாலும் நடிப்பின் மீது இருந்த ஆசையால் இவர் முதலில் ஒரு டான்சராக அறிமுகமாகி பின்பு பல சீரியல்களில் நடித்திருக்கிறார். கோலங்கள் சீரியல் என்று சொன்னாலே அதில் டக் என்று நினைவிற்கு வரும் கேரக்டர்களில் ஒன்று தான் ஆர்த்தி அந்த ஆர்த்தி கேரக்டரில் தான் ஸ்ரீ வித்யா பாசிட்டிவ் கேரக்டராக நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தென்றல் சீரியலில் இவருடைய வில்லத்தனத்தை பார்த்து பலரும் மிரண்டு போய் இருக்கின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இவர் நடித்திருக்கிறாராம். இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு சினேகா நடித்த "என்னவளே" திரைப்படத்தில் சினேகாவின் தங்கையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படமாக அமைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து என்னிடத்தில் உன்னை கொடுத்தேன் என்ற திரைப்படத்திலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தான் இவருக்கு கோலங்கள் சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் சீரியலில் இவருக்கு கிடைத்த வாய்ப்பின் காரணமாக அடுத்த சீரியலில் இவருக்கு தென்றல் சீரியலில் நெகடிவ் கேரக்டர் கிடைக்கும்போது முதலில் பயந்து இருக்கிறார். ஆனால் தன்னுடைய திறமையை காட்டுவதற்கு இதுதான் சரியானது என்று ஓகே செய்த பிறகு தான் இவர் எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் இவரை திட்டி வந்திருக்கிறார்கள்.

மீண்டும் ரீ என்ட்ரி

மீண்டும் ரீ என்ட்ரி

நடிகையாக டான்ஸராக மட்டுமல்லாமல் இவர் ஒரு பிசினஸ் உமன் ஆகவும் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஜோதிகாவின் தோழியாகவும் இவர் நடித்திருப்பார். நடித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய உறவினரை இவர் திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்ததும் இவர் ஒரு சில வருடங்களாக தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை நிறுத்தி வைத்திருந்த இவர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான வல்லமை தாராயோ என்ற சீரியலில் ஸ்கிரிப்ட் ரைட்டராக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

எதிர்நீச்சல் வசனத்துக்கு சொந்தகாரர்.

எதிர்நீச்சல் வசனத்துக்கு சொந்தகாரர்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆகவும் இருந்து வருகிறார். சீரியல் தொடங்கி பல மாதங்களாக பேசாமல் இருந்த அப்பத்தா எப்போது தான் பேசுவார் இவரும் சந்திரமுகி பாம்பும் ஒன்று , தற்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே! என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது அப்பத்தா "பட்டம்மாள் எம் ஏ" என்று மாஸாக பேசியது சமூக வலைத்தளத்தில் பல்வேறு மீம்ஸ்களாக வலம் வந்தது. அதுமட்டுமல்லாமல் ஜனனி தன்னுடைய போல்டான முடிவை கம்பீரமாக பேசுவது, குணசேகரன் எதார்த்தமாக பேச்சு வழக்கிலே பேசுவது என எதிர்நீச்சல் சீரியலில் டயலாக் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்து இருக்கிறது. அதற்கு காரணம் சின்னத்திரை நடிகையான ஸ்ரீவித்யா தானாம். இவர் தான் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வார்த்தைகளாக உருவாக்கி கேரக்டர்கள் ரசிகர்களின் மனதோடு ஒட்டிவிடும் வகையில் தத்ரூபமாகவும் எழுதி வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+