சாயங்காலம் 6 மணிக்கு மேல இந்த ஹீரோவுக்கு வெளியே போக முடியாது.. என்ன பிரச்சினை தெரியுமா?
சென்னை: மாலை 6 மணிக்கு மேல் ஒரு ஹீரோவால் வெளியே போக முடியாது. ஏன் என்ன பிரச்சினை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'சின்னத்தம்பி' திரைப்படத்தில் காமெடி நடிகர் கவுண்டமணி, கோடி ரூபாய் கொடுத்தாலும் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்ய மாட்டேன் என்பார். அப்படி என்னதான் அவருக்குப் பிரச்சினை எனப் போய்ப் பார்த்தால், ஒரு புகைப்படத்திற்கு முன்பு நின்றுகொண்டு "டேய் அப்பா டேய்" எனப் புலம்புவார். அவருக்கு மாலைக்கண் நோய் இருக்கும். இதனால் மாலை 6 மணிக்கு மேல் அவருக்குப் பார்வை தெரியாது. எனவே, 6 மணி அடித்தால் போதும் வீட்டிற்குள் வந்து பதுங்கிக்கொள்வார்.

அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில், ஹீரோ 6 மணிக்கு மேல் வெளியே போனால் என்ன நடக்கும் என்பதுதான் கதை! அந்தப் படத்தின் பெயர் 'அபூர்வ நாகம்'. இந்தப் படத்தில் ஸ்ரீவித்யா, நிழல்கள் ரவி, ஜெய்கணேஷ், கவுதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் கதையாகும். இதற்கு, கணினி வரைகலை (Computer Graphics) மற்றும் அனிமேஷன் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
படத்தின் கதை என்ன
இந்தப் படத்தின் கதை என்னவென்று பார்க்கலாம். கொட்டும் மழையில் ஸ்ரீவித்யாவுக்கு திடீரெனப் பிரசவ வலி வந்துவிடும். உடனே ஜெய்கணேஷ் தனது மனைவியைக் காரில் உட்கார வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். அங்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.
ஆண் குழந்தையை ராஜாபோல் சீரும் சிறப்புமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதற்கு 'ராஜா' எனப் பெயரிடுவார்கள். அந்தக் குழந்தை குறித்துப் பல்வேறு கனவுகளைக் கண்டுகொண்டிருக்கும் நிலையில், படுக்கையில் இருந்த பச்சிளம் குழந்தை, மாலை 6 மணிக்கு மேல் பாம்பாக மாறிவிடும்.
ஸ்ரீவித்யா அதிர்ச்சி
இதைப் பார்த்து ஸ்ரீவித்யாவும் ஜெய்கணேஷும் அதிர்ச்சி அடைவார்கள். இதற்கான காரணம் தெரியாமல் இருவரும் குழம்பிக்கொண்டிருக்கும் நிலையில், நாட்கள் பல உருண்டோடி, அந்த ராஜாவுக்கு 20 வயதாகிறது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர்தான் நிழல்கள் ரவி.
கல்லூரிக்கு போன ராஜா
ஜெய்கணேஷ் அவசர அவசரமாக மாலை 5 மணிக்கெல்லாம் வந்து, "அன்னபூரணி, அன்னபூரணி (ஸ்ரீவித்யாவின் கதாப்பாத்திரப் பெயர்), வா நாம கல்லூரிக்குப் போய் ராஜாவின் பரிசை வாங்கி வரலாம்" என்பார். அதற்கு ஸ்ரீவித்யாவோ, "என் பரிசை நானே என் கையால் வாங்கிக்கொள்கிறேன். எனக்குத்தான் முதலில் கொடுப்பார்கள். நான் 6 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுகிறேன்" எனக் கூறி, நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி விழாவுக்கு ராஜா சென்றுவிட்டான் என்பார்.
கோபமடைந்த ஜெய்கணேஷ்
உடனே கோபமடையும் ஜெய்கணேஷ், "இப்பவே மணி 5.30. ஏம்மா, அவன் போவேன் எனச் சொன்னால் உனக்கு எங்கே போச்சு அறிவு? அவன் மற்ற பிள்ளைகள் மாதிரியா? மாலை 6 மணிக்கு மேல் அப்படி ஏதாவது ஆகி, அதை யாராவது பார்த்துவிட்டால் என்ன ஆவது?" எனக் கேட்டபடியே காரை எடுத்துக்கொண்டு வேகமாக கல்லூரிக்குச் செல்வார்.
அப்போது மணி மாலை 5.45 ஆகும். திடீரென ராஜாவின் முகம் பதற்றமாக இருக்கும். காதுகளில் இருந்து ஏதோ திரவம் போல் வரும். என்ன ஆகுமோ என நிழல்கள் ரவி பதறும்போது, அவர் பெயரைப் பரிசுக்காக அழைப்பார்கள்.
தத்திக் தடுமாறி மேடைக்குச் சென்ற நிழல்கள் ரவி, பரிசைப் பெற்றுக்கொள்வார். அத்துடன் அந்தக் காட்சி முடியும். வீட்டில் ஸ்ரீவித்யா, மகனையும் கணவரையும் காணாமல் தவித்துக்கொண்டிருப்பார். அப்போது கார் சத்தம் கேட்கும். ஓடி வந்து பார்க்கும்போது, ஜெய்கணேஷ் ஒரு கையில் கோப்பையுடனும் மறுகையில் பாம்புடனும் வருவார்.
பாம்புடன் ஜெய்கணேஷ்
உடனே ஜெய்கணேஷ், "நல்ல வேளை, யாரும் பார்க்கவில்லை அன்னபூரணி" என்பார். அப்போது ஸ்ரீவித்யா அழுதுகொண்டே, "பெயரையும் புகழையும் வாங்கிக்கொண்டு ஒரு பிள்ளை வீட்டுக்குள் வரும்போது எந்தத் தாயும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் எனத்தான் ஆசைப்படுவாள். அந்தக் கொடுப்பினைதான் நமக்கு இல்லாமல் போச்சே" என அந்தப் பாம்பைக் கையில் பிடித்துக்கொண்டு அழுவார்.
பாம்பாக மாறும் நிழல்கள் ரவி
பின்னர் அந்தப் பாம்பை ஸ்ரீவித்யா படுக்கையில் விட்டுவிட்டுப் பால் வைத்துவிட்டுக் கோயிலுக்குச் செல்வார். அங்கு புற்று அம்மனிடம் போய், "எங்களுக்கு ஒரு குழந்தை கொடு என கேட்டதற்கு நீ ராஜாவைக் கொடுத்தாய்! ஆனால் அந்தக் குழந்தை 6 மணிக்கு மேல் பாம்பாக மாறுகிறானே. ஒன்று என் பிள்ளையை மனிதனாக மாற்று; இல்லையென்றால் எங்களை உன்னிடமே அழைத்துக்கொள்" என அழுவார். வித்தியாசமான முயற்சியுடன் வந்த திரைப்படம் இது. நீங்களும் பார்த்துவிட்டு கமெண்ட்டில் சொல்லுங்கள். இப்படி ஒரு பிரச்சினை நிஜமாகவே இருக்க கூடுமா, அல்லது இல்லையா?
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications