நடிகை பிரியா பவானி சங்கரா இப்படி? நடு ரோட்டில் கெட்ட வார்த்தையால் சண்டை.. திகைத்த ஆட்டோக்காரர்
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் தான் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது நடந்த நிகழ்வு பற்றி பேசி இருக்கிறார்.
அப்போது நடு ரோட்டில் தான் ஒரு நபரை கெட்ட வார்த்தையில் பேசி சண்டை போட்டதாகவும், அதற்கான காரணத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவராக நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது இருந்து வருகிறார். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிறகு சின்னத்திரையில் கதாநாயகியாக பலருடைய மனதையும் கவர்ந்திருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர் பிரியா கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் அதிகமான ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர். இதைத்தொடர்ந்துதான் அவர் சின்னத்திரையை விட்டு வெள்ளி திரையில் பறக்க தொடங்கி விட்டார். வெள்ளி திரையில் ஆரம்பத்தில் சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர் மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக கலக்கி விட்டார்.
அதைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு நடித்துவரும் ப்ரியா பவானி சங்கர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராஜவேல் என்பவரோடு அவர் அடிக்கடி அவுட்டிங் சென்று புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் ஃபீல் பண்ணவும் வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு பிரியா பவானி சங்கர் ஆமாம் நான் நியூஸ் சேனலில் வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு போகும்போது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு ஆட்டோக்காரர் என்னை பார்த்து கெட்ட வார்த்தையில் பேசி வாய் விட்டார்.
அப்போது எனக்கு கோபம் வந்து வண்டியில் இருந்து இறங்கி நடுரோட்டில் கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டி சண்டை போட்டு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை சண்டை போட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications