Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தான் மரணப்படுக்கையில் இருக்கும்போதும்கூட கமலஹாசனை பார்க்க ஆசைப்பட்ட நடிகை.. காரணம் ஒன்று தானாம்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த காலத்திலும் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசனை மரணப்படுக்கையில் பார்க்க வேண்டும் என்று நடிகை ஸ்ரீவித்யா அடம் பிடித்திருக்கிறார்.

ஸ்ரீவித்யா கமலோடு நடித்த முதல் திரைப்படத்திலிருந்து அவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தான் இறக்கும் தருணத்திலும் கமல் ஒருவரை மட்டும் தான் ஸ்ரீ வித்யா பார்ப்பதற்காக ஆசைப்பட்டாராம்.

மறக்க முடியாத நடிகை

மறக்க முடியாத நடிகை


நடிகை ஸ்ரீவித்யாவின் நடிப்பை அந்த அளவில் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. 80ஸ் களில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீவித்யா கதாநாயகியாக மட்டுமல்லாமல் பல நடிகைகளுக்கு அம்மாவாகவும், குணச்சித்திரங்களிலும் நடித்திருக்கிறார். அவருடைய இறப்பு பலரால் இப்ப வரைக்கும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா மரண படுக்கையில் இருக்கும் போது அவர் பார்க்க ஆசைப்பட்ட ஒரே நபர் கமல்ஹாசன் தானாம்.

 பார்க்க ஆசைப்பட்ட நபர்

பார்க்க ஆசைப்பட்ட நபர்

1973இல் கே பாலச்சந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த சொல்லத்தான் நினைக்கிறேன் என்னும் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடிகை ஸ்ரீவித்யாவும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். 1975-ல் வெளியான அபூர்வராகங்கள் மற்றும் அன்னை வேளாங்கண்ணி என்னும் ஒரு சில திரைப்படங்களில் அவரோடு சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் கமலஹாசன் மீது நடிகை ஸ்ரீவித்யாவிற்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அப்போது நடிகர் கமலஹாசனை வாணி திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு தன்னுடைய காதலை வெளி காட்டாமல் ஸ்ரீவித்யா மறைத்து வைத்திருக்கிறார்.

மீண்டும் ஒன்றாக நடிப்பு

மீண்டும் ஒன்றாக நடிப்பு

மீண்டும் 1986 ஆம் ஆண்டு புன்னகை மன்னனில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அப்போது இவர்களுக்குள் அழகான நட்பும் நடிப்பும் வெளிப்பட்டது .அதற்குப் பிறகு சந்திரன், கடைசியாக காதலா காதலா என்னும் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருப்பார்கள். அதற்குப் பிறகு தான் ஸ்ரீ வித்யாவிற்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட தொடங்கி இருக்கிறது. கேரளாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு தான் அவருடைய கடைசி காலகட்டத்தை வாழ்ந்து இருக்கிறார்.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீ வித்யா கமல்ஹாசனுக்கு திருமணம் முடிந்த பிறகு சார்ஜ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவருக்காக ஞானஸ்தானமும் பெற்று ஒரு இல்லத்தரசியாக இருக்க விரும்பி இருக்கிறார் .ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக சார்ஜ் அவரை கட்டாயப்படுத்தி மீண்டும் நடிக்க வைத்திருந்தாராம். அந்த நிலையில் தான் அவர் திருமணம் செய்வதில் தவறான முடிவு எடுத்ததை உணர்ந்து இருக்கிறார். இனி நமக்கு இது சரிப்பட்டு வராது என்று இவர் 1980 இல் விவாகரத்தில் திருமண வாழ்க்கையை முடித்து இருக்கிறார் .அதற்குப் பிறகு அனைத்து சொத்துக்களையும் சார்ஜ்யிடம் இருந்ததால் நீதிமன்றம் வரை சென்று கடைசியில் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இவரிடமே இவருடைய சொத்து வந்து சேர்ந்திருக்கிறது.

கடைசி ஆசை

கடைசி ஆசை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாக மாறிய பிறகு ஸ்ரீவித்யாவோட கடைசி ஆசை கமல்ஹாசனை ஒரு முறையாவது பார்த்து பேச வேண்டும் என்பதுதானாம். ஸ்ரீவித்யாவின் ஆசை கமலுக்கு தெரிய வந்ததும் அந்த ஆசையை நிறைவேற்றினது கமல்ஹாசன் தான். ஸ்ரீவித்யா பற்றி பலருக்கு தெரியாத விஷயம் என்னன்னா அவங்களோட சொத்து ஆதரவற்றவர்களுக்கும், ஏழை எளிய மாணவர்களின் படிப்பு உதவி தொகை வழங்குவதற்காகவும், நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கவும் கூறி தன்னுடைய சொத்தில் பெரும் பகுதியை உயில் எழுதி வைத்திருக்கிறார். தன்னுடைய வேலை ஆட்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீவித்யா 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி மரணம் அடைந்திருக்கிறார் .அவருடைய உடல் அரசு மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+