எதிர் நீச்சலில் ஆதிரை திருமணத்திற்கு இத்தனை மாதங்கள் ஏன்..வெளிப்படையாக பேசிய விசாலாட்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார்.
சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் எதனால் பல மாதங்களாக இழுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை பற்றி அவர் பேசியிருக்கிறார்.
சீரியலில் இனி வரப்போகும் ட்விஸ்ட் பற்றியும் நடிகை சத்யபிரியா பேசி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் ஆக இருந்து வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வன் பல வருடங்களுக்கு பிறகு இயக்கி வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டார்கள்.
அந்த வகையில் இந்த சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் குணசேகரின் அம்மாக்காக நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார். நடிகை சத்யபிரியா ஏற்கனவே திருச்செல்வன் இயக்கத்தில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஏழு வருடங்களாக கோலங்கள் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல தற்போதும் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கேரக்டர் தத்ரூபமாக இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு அப்பத்தா கேரக்டரில் தான் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அப்பத்தா கேரக்டர் இரண்டு மாதம் ஆகும் என்ற போது தான் இவருக்கு விசாலாட்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவும் எனக்கு பிடித்ததாக தான் இருக்கிறது என்றும் இந்த கேரக்டரில் சில நேரங்களில் பாசிட்டிவாகவும் சில நேரங்களில் நெகட்டிவ் ஆகவும் சில நேரங்களில் ஏமாளி ஆகவும் மாறும் மனநிலையில் இருப்பதால் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் அதிகமான வரவேற்பு இருந்த நிலையில் திடீரென்று ஆதிரை திருமண விஷயம் தொடங்கிய பிறகு ரசிகர்கள் வெறுக்க தொடங்கி இருக்கிறார்கள். சலிப்பு தட்ட தொடங்கிவிட்டது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, அதற்கு சத்யபிரியா ஆதிரை திருமண விஷயத்தில் அத்தனை பெரிய கதை இருக்கிறது. அதனால் தான் இத்தனை மாதங்களாக இந்த ட்ராக் போய்க் கொண்டே இருக்கிறது.
பார்ப்பவர்களுக்கு என்ன இப்படி இருக்கிறது என்று தோன்றினாலும் இதில் தான் மொத்த பிரச்சனைகளும் வர இருக்கிறது. அதுபோல இனி இந்த சீரியலில் இருக்கும் மருமகள்கள் மார்டனாக மாற இருக்கிறார்கள். இதுவரைக்கும் இருந்த இருந்து வரும் கேரக்டருக்கும் இனி இவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கேரக்டர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அதுவும் ஆதிரையின் திருமண விஷயத்தில் தான் இருக்கிறது. அதனால் தான் இந்த சீரியலில் ஆதிரை திருமணத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை வரும் காலத்தில் பார்த்து புரிந்து பிறகு ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications