நானே சொல்கிறேன்.. அதுவரைக்கும் நம்பாதீங்க.. பாக்கியலட்சுமி ஜெனிஃபர் விளக்கம்
சென்னை : என்ன காரணம் என்று தெரியாமல் பாக்கியலட்சுமி நடிகை ஜெனிபரின் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ள நிலையில் அவர் வீடியோ போட்டு அழகாக விளக்கியுள்ளார்.
ஒன்னுனா ஒம்போதுன்னு சொல்றாங்க. அதை நம்பவே நம்பாதீங்க . நானே விளக்கமா சொல்றேன்.. அதுவரைக்கும் எதையும் நம்பாதீங்க என்று சொல்லியுள்ளார் ஜெனிபர்.
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து பிரபலமானவர்தான் ஜெனிபர். தற்போது அந்த ரோலில் இவர் நடிக்கவில்லை.

இடியாய் வந்து இறங்கிய செய்தி
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக தற்போது ரசிகர்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருந்த ஜெனிஃபர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி உள்ளனர். தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து இழுத்த இவர் இந்த சீரியலில் இல்லை என்று தெரிந்ததும் ரொம்பவே பீல் பண்ணி இருக்கின்றனர்.

ஷாக் கொடுத்த ப்ரோமோ
ரசிகர்களின் அனுதாப ஓட்டை வாங்கிய இவர்இப்போது சீரியலில் இல்லை என்றதும் ரசிகர்கள் ஏங்கிப் போய் விட்டனர் . இதுதொடர்பாக பல்வேறு காரணங்கள் என்று கூறி பல தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பமே நிலவுகிறது. ஏன் விலகினார் ஜெனிபர் என்பதில் தெளிவு இல்லாத நிலையே காணப்படுகிறது.

மிஸ் பண்ணும் ரசிகர்கள்
தற்போது ஜெனிபருக்குப் பதிலாக ரேஷ்மா பசுபுலேட்டியை களமிறக்கி இருக்கின்றனர். அவரை பார்த்ததும் ஷாக் ஆன ரசிகர்கள் ஜெனிபரை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாகவும், இனி இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க மாட்டோம் என்றும் கமெண்ட் களில் கூறிவந்தனர் . அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலை பற்றி பல மீம்ஸ்களும் வைரலாக பரவி வருகிறது .

ரசிகர்களின் பாசம்
இதனை பார்த்ததும் முதல்முறையாக ஜெனிஃபர் தன்னுடைய நிலையை விளக்கியுள்ளார் .அதில் என்னை பற்றியும் இந்த சீரியலில் இருந்து நான் விலகியதைப்பற்றியும் அறிந்த ரசிகர்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என அவர்களுடைய கமெண்ட் களிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது .

அதையெல்லாம் நம்பாதிங்க
அதுமட்டுமல்லாமல் என்னை பற்றி சமூக வலைத்தளத்திலும், செய்தி ஊடகங்களிலும் அதிகமான வதந்திகள் பரவி வருகிறது .அது எல்லாம் கொஞ்சம் கூட உண்மை இல்லை .அதையெல்லாம் நம்பாதிங்க என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் . உங்களுடைய பாசத்தை பார்க்கும்போது மெய்சிலிர்த்துப் போனேன். எனக்கு இந்த அளவிற்கு ஆதரவு தந்ததை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது .

சஸ்பென்ஸ் தாங்கலப்பா
சந்தோஷத்தில் வார்த்தை வரவில்லை ஆனாலும் உங்களுக்கு நடந்ததை தெரியப்படுத்த வேண்டும் என்றுதான் நானே தற்போது விளக்கத்தை கொடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் உண்மையான காரணத்தையும் விரைவில் உங்களிடம் கூறுவேன் என சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார். இவருடைய சஸ்பென்ஸை பார்த்ததும் ரசிகர்கள் அதை இப்பொழுதே சொன்னாத்தான் என்னவாம் என்று உரிமையுடன் கேட்டு வருகின்றனர்.

உரிமையுடன் சண்டை
நீங்கள் உண்மையை சொல்லவில்லை என்பதால் தான் அடுத்தவர் கூறும் பொய்யையும் நாங்கள் உண்மை என நம்ப வேண்டியுள்ளது .அதனால் அங்கு என்னதான் நடந்தது எதற்காக இந்த சீரியலை விட்டு போனீங்க என்று கேட்டு வருகின்றனர் .ரசிகர்கள் அவ்வளவு உரிமையுடன் அவரிடம் சண்டை போடுவதை பார்க்கும்போதே தெரிகிறது இவர் ரசிகர்களின் மனதை எந்த அளவிற்கு இடத்தை பிடித்து இருக்கிறார் என்று.

ரசிகர்களின் பீலிங்
இவர் இந்த சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்து விட்டார் .இந்த சீரியல் ஒளிபரப்ப தொடங்கி ஒரு வருடம் முடிவடையும் நேரத்தில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் . அதனை நினைத்து அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். பல சீரியல்களிலும் நடித்து இருந்தாலும் அதையெல்லாம் விட இவருக்கு ஒரு வருடத்திற்குள் இந்த சீரியல் மூலமாக ரசிகர்கள் அதிகரித்து விட்டனர்.

ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது
இந்த சீரியலில் இரண்டு பெண்களின் வாழ்க்கையில் ஒரு ஆண் செய்யும் துரோகங்களையும், இரண்டு பெண்களுமே அவர்களுக்குத் தெரியாமலேயே ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையையும் ரசிகர்களுக்கு பழகிப்போனதாக இருந்தாலும் , இது பிடித்ததாக இருக்கிறது . அதுவும் ராதிகாவாக நடிக்கும் ஜெனிஃபர் கேரக்டருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

பாக்யாவின் கணவன் கோபி
இன்னொருவரிடம் பாசத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அவரை நல்லவர் என நம்பிக் கொண்டிருக்கும் போது அவர் ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி குழந்தையுடன் இருக்கிறார் .அதுவும் ராதிகாவின் தோழியின் கணவன் .ராதிகாவுக்கு கோபி தனது தோழி பாக்யாவின் கணவன் தான் என்று எப்போது தெரியும் என விறுவிறுப்பாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகாவை மாற்றிவிட்டார்கள் .

திரைப்படத்தை தாண்டி சீரியல்
சீரியல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஜெனிபர் ஏற்கனவே பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் முதன்முதலாக ரிதம் படத்தில் "தனியே தன்னந்தனியே" எனும் பாட்டுக்கு செம ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்தவர் .அதற்குப்பிறகு திரைத்துறையில் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

கதாநாயகி ரேஞ்சை விட்டு விட்டாரே
இருந்தாலும் சினிமா சரியாக செட் ஆகாததால், சீரியலில் காலடி எடுத்து வைத்தார் .2008 ஆம் ஆண்டு தொடங்கி இப்ப வரைக்கும் சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மனதில் மட்டுமல்லாமல் தமிழக மக்களின் குடும்பத்திலும் ஒரு அங்கமாக மாறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications