பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து வெளியேறும் கதிர்.!? காரணம் இதுதானா? சட்டுபுட்டுனு இப்படி முடிவா?
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து கதிர் கேரக்டரில் நடித்து வந்த குமரன் தங்கராஜன் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் நடிகர் குமரன் தங்கராஜன் நடித்து வந்தார்.
தற்போது குமரன் அடுத்தடுத்து வெப் சீரிஸில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இந்த சீரியலில் இனி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது

அடிக்கடி மாற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த சீரியலில் அதிகமான வெளி காட்சிகள் இல்லாமல் இருந்தாலும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் காதல், மோதல், சண்டை சச்சரவுகள் போன்றவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை இருந்து வருகிறது. அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு கூட்டு குடும்பத்தை வலியுறுத்தும் இந்த சீரியலில் பல நடிகர்கள் ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது இல்லை. குறிப்பாக பல கதாநாயகிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். அதிலும் முல்லை கேரக்டரிலும் ,ஐஸ்வர்யா கேரக்டர், மீனா கேரக்டர் போன்றவர்கள் முக்கியமான கேரக்டராக இருந்தாலும் இவர்கள் அடிக்கடி மாறப் மாற்றப்பட்டு வருகிறார்கள்.

வதந்தி வெப் சீரிஸ்
இந்த நிலையில் இந்த சீரியலில் கதிராக நடிகர் குமரன் நடித்து வருகிறார். இதற்கு முன்பு குமரன் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சிறந்த டான்சராகவும் இருக்கிறார். ஆனாலும் ரசிகர்களின் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது என்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியலின் பிறகு தான் இவருக்கு நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்த வதந்தி என்ற ஓடிடி வெப் சீரிஸில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இணைய தொடர் நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் குமரனின் கேரக்டர் பெரும் திருப்புமுனையாக அந்த சீரிஸில் இருந்து வந்தது.

புது வாய்ப்பு
அதைத்தொடர்ந்து தற்போது ஹிந்தி மொழியில் பிரபலமான ஹாங்கமா ஓடிடி நிறுவனம் தற்போது தமிழில் முதல்முறையாக மாயத் தோட்டா என்ற தொடரை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் என பல பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் கதாநாயகன் ஆன கதிர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் இயக்குனர் எஸ்ஏ சூர்யா நடித்த வதந்தி தொடரில் நான் நடித்து எனக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. சினிமாவை நோக்கி பல காலமாக நான் பயணித்துக் கொண்டிருந்தேன் ஆனால் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் தற்போது சினிமா முற்றிலும் மாறிவிட்டது. இதனை பார்த்த எனக்கு வெப் சீரிஸ் கூட நன்றாக இருக்கிறது என்று தோன்றியது. நான் வதந்தி தொடரில் நடித்ததை பார்த்து தான் என்னை மாயத்தோட்டா தொடருக்கு நடிக்க அழைத்தார்கள்.

இனி தொடர்வாரா
மேலும், என்னுடைய கதாபாத்திரம் இசட் பிரிவில் வரும் தலைமை அதிகாரி தான். அதனால் என்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டியது இருந்தது. நான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் லுங்கி ஓடு வருவேன். ஆனால் இந்த தொடரில் பலவிதமான மாறுதல்கள் தேவைப்பட்டது. ஏற்கனவே வதந்தி தொடரில் போது கொஞ்சம் எடை போட வேண்டியது இருந்தது. ஆனால் இந்த வெப் சீரிஸுக்காக அதனை குறைத்து வருகிறேன். நான் இந்த மாயத்தோட்ட வெப்சீரிஸில் நடிப்பதற்காக இசட் பிரிவு என்றால் என்ன? அவர்களின் வேலை என்ன? அவர்களை எதற்காக உருவாக்கினார்கள்? அவர்கள் எப்படி ஆயுதங்களை பயன்படுத்துவார்கள்? முதற்கொண்டு அனைத்தும் நான் ஒவ்வொரு விஷயமாக தேடி கற்றுக் கொண்டேன். ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த சீரியஸை கண்டிப்பாக மக்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் கதிர் மீண்டும் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பாரா? அல்லது வெப் சீரிஸில் பிஸியாக இருப்பதால் இந்த சீரியலை விட்டு விலகி விடுவாரா? என்று பல்வேறு கேள்விகள் கிளம்பி வருகிறது. அதைக் குறித்து குமரன் எந்த தகவலையும் கூறவில்லை.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications