சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி ரகசியம்! திரை மறைவு உழைப்பு! அத்தனையும் நிஜம்.. பூக்களுக்காக இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடும் சரி இன்றைய எபிசோடும் சரி மக்கள் மத்தியில் அதிகமான பாராட்டுகளை பெற்றிருக்கிறது. அதோடு இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் நடிகர்கள் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடர்ச்சியாக விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல இல்லாமல் கதை வித்தியாசமாக பயணித்துக் கொண்டிருப்பதும் பலரையும் கவர்ந்திருக்கிறது.

பொதுவாக பல சீரியல் கதாநாயகன் மற்றும் கதாநாயகியை சுற்றியே கதை பயணித்துக் கொண்டிருக்கும். ஆனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எல்லோருக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுபோல இந்த சீரியலில் அடிக்கடி அழுகை காட்சிகள் இடம் பிடிப்பதில்லை. அதே நேரத்தில் ஒரு வீட்டிற்குள் நடப்பது போன்று காதல், மோதல், சண்டை சச்சரவுகள், சவால்கள் என அத்தனையும் கலந்த கலவையாக இந்த சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இதுவும் இந்த சீரியலுக்கு சிறப்பாக இருக்கிறது. இப்படி ஆன நிலையில் தான் இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்த் நடிகர் சுந்தர்ராஜன் பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் இந்த சீரியல் மற்ற சீரியல்களை விட வித்தியாசம் காட்டுவதற்கு காரணம் இந்த சீரியலில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எங்களுக்கு முழு பிரீடம் கொடுக்கிறார்கள்.
அதுபோல நாங்கள் எதை செய்தாலும் அதிகமாக பாராட்டுகிறார்கள். இது இங்கு எங்களுக்கு இன்னும் இங்கே வேலை செய்வதற்கு தோன்றுகிறது. ஆர்வம் வருகிறது... நேற்று ஒளிபரப்பான எபிசோட்டில் எல்லோரும் பாட்டு பாடுவது போன்ற காட்சிகள் இருக்கும். அந்தப் பாடல்களை நிஜமாகவே இவர்கள்தான் பாடி இருக்கிறார்கள். அதிலும் நடிகர் சுந்தர்ராஜன் தான் சொந்தமாக முதல் முறையாக இந்த சீரியலில் தான் பாடியிருந்தாராம்.
அதிலும் தான் பாடினால் சரியாக இருக்குமா என்று இயக்குனரிடம் கேட்க அவர் நீங்கள் பாடுங்கள் சரியாக இருக்கும் என்று கொடுத்த தைரியத்தால் இவரும் பாடியிருக்கிறார். பிறகு டப்பிங் பேச போகும்போதெல்லாம் தான் பாடிய பாடலை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே இருந்தாராம். அதில் எது சரியாக இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இப்படி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எல்லோருமே தங்களுடைய பெஸ்ட் கொடுப்பதால்தான் இதில் காட்சிகள் எல்லாம் எதார்த்தமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். அதுபோல இது சீரியலில் இப்போது மீனா 500 மாலை கட்டுவது போன்ற காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. அதற்காக நிஜத்திலே இந்த சீரியலில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக பூக்கள் வாங்கி இருந்தார்களாம்.
பொதுவாக மற்ற சீரியல்களில் கொஞ்சம் பூவை வைத்துக்கொண்டு டெக்னிக் ஷாட் மூலம் நிறைய பூக்கள் வாங்கியது போல காட்டுவார்கள். ஆனால் இங்கே உண்மையாகவே பூக்கள் வாங்கிக் கொண்டு குவித்திருக்கிறார்கள். இப்படி பல விஷயங்கள் இவர்கள் ரியாலிட்டியாக செய்வதால் இந்த சீரியல் தொடர்ந்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications