மாப்பிள்ளை கொடுத்த லெட்டர்! ஃபங்ஷனில் விஜயகுமார் பேத்தி பேச்சால் அழுத உறவுகள்.. பிரபலம் உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமார் பேத்தியின் திருமணம் இரண்டு தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்தில் சங்கீத் பங்க்ஷனில் மணப்பெண் தியா பேசிய வார்த்தையால் உறவினர்கள் அழுது விட்டனர் என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேக்கப் ஆர்டிஸ்ட் அங்கு நடந்த ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

அதோடு மணப்பெண் தியா மற்றும் அவருடைய குடும்பத்தினர்கள் எல்லோருமே பிரபலங்கள் என்பதை மறந்து அந்த திருமணத்தில் நடந்து கொண்ட விதத்தையும் மேக்கப் ஆர்டிஸ்ட் பெருமையாக பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Why Relatives cried by Vijayakumars granddaughter at Sangeet function

அந்த வகையில் சமீபத்தில் பல பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடிகர் விஜயகுமாரின் பேத்தியின் திருமணம் நடைபெற்றது. விஜயகுமாரின் மகள் அனிதா வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து இருந்தார். அதுவும் சென்னையில் பிரமாண்டமாக வீடு ஒன்றை வாங்கி இருந்த நிலையில் அதைத்தொடர்ந்து தன்னுடைய மகளின் திருமணத்தை அங்கு வைத்து நடத்தி இருக்கிறார்.

Why Relatives cried by Vijayakumars granddaughter at Sangeet function

இந்த நிலையில் விஜயகுமாரின் மகள் அனிதாவை போலவே அவருடைய மகள் தியாவும் டாக்டராக இருக்கிறார். லண்டனில் படிப்பை முடித்து அங்கு டாக்டராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தியா தன்னோடு கல்லூரியில் ஒன்றாக படித்த டாக்டர் திலன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இரண்டு குடும்பத்தினரும் சம்மதித்து இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்தில் தியாவிற்கு மேக்கப் செய்த பெண் திருமணத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் இதுவரைக்கும் எத்தனையோ பிரபலங்களுக்கு மேக்கப் செய்திருக்கிறேன். ஆனால் தியாவை போல ஒருவரை பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Why Relatives cried by Vijayakumars granddaughter at Sangeet function

காரணம் தியா ஒரு செலிப்ரிட்டி குடும்பத்தின் குழந்தையாக இருந்தாலும் அதை பற்றி அவர் எந்த இடத்திலும் பிகு செய்து காட்டிக் கொள்ளவே இல்லை. தியா என்னிடம் போன வருஷமே என்னுடைய கல்யாணத்துக்கு நீங்க தான் மேக்கப் பண்ணனும் என்று புக் பண்ணி விட்டார். அப்போது பெருசா இவர் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் இப்போது இவருடைய திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

திருமணத்திற்கு முன்பு மூன்று நாட்கள் பங்க்ஷன் நடந்தது. எல்லா ஃபங்ஷனுக்கும் நான் தான் அவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தியாவிற்கு பெரிய அளவில் மேக்கப் போடவே இல்லை. எனக்கு நேச்சுரலாக இருக்கிறதே பிடித்திருக்கிறது அதனால் கொஞ்சம் குறைவாகவே போடுங்கள் என்று சொல்லிவிட்டார். அவருடைய கண்களுக்கு மட்டும் தான் நான் ஹைலைட் பண்ணி இருந்தேன்.

Why Relatives cried by Vijayakumars granddaughter at Sangeet function

அதுபோல அங்கு நடந்த நிகழ்வுகளில் நான் பார்த்து வியந்தது என்றால் சங்கீத் பங்க்ஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு தியா பேசியதை கேட்டு அவருடைய உறவினர்கள் எல்லோருமே அழுதுவிட்டார்கள். அதாவது அவருடைய சித்தி ஸ்ரீதேவி, பிரீத்தா, மாமா அருண் விஜய், பெரியம்மா கவிதா, தாத்தா விஜயகுமார், பாட்டி என எல்லோரும் தியா பேசியதை கேட்டு அழுது விட்டார்கள்.

ஆனால் தியா இதைப் பேச வேண்டும் என்று தான் எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள் போல... அந்தக் காட்சி அது ஒரு உணர்வுபூர்வமான தருணமாக இருந்தது. அதுபோல நான் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும்போது தியாவின் கணவர் இரண்டு நாள் லவ் லெட்டர் வந்து கொடுத்துட்டு போனதை நான் பார்த்தேன்.

இந்த காலத்திலும் இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களா? என்று தான் எனக்கு தோன்றியது. தியாவின் கணவரும் தியாவை போலவே ரொம்பவும் எளிமையாக இருந்தார். இருவரும் இங்கிலீஷில் தான் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கு இருந்த எல்லோருமே எளிமையாக நடந்து கொண்டிருந்தனர்.

தியாவிற்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயங்களையும் செய்து கொண்டு இருந்தனர். அதிலும் தியாவின் அம்மாவான அனிதா அடிக்கடி வந்து தியாவிற்கு என்ன வேணும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதுபோல சித்தி, பெரியம்மா கூட தியாவிற்காக ஒவ்வொரு பொருட்களையும் பார்த்து பார்த்து எடுத்துக் கொடுத்தனர். அதுபோல அந்த இடத்தில் இருந்தது எனக்கு ஒரு திருவிழா போல இருக்குது என்று தியாவிற்கு மேக்கப் செய்த பெண் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+