பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் ரித்திகா..!? காரணம் இதுதானா? அப்போ இனி யார் அமிர்தா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடிகை ரித்திகா நடித்து வருகிறார்.
ரித்திகா தற்போது பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் ரித்திகாவிற்கு பதிலாக யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பெரும் எதிர்பார்ப்போடும், விறுவிறுப்போடும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆர்வம் அனைவரிடமும் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் பற்றி ஒரு அப்டேட் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வெளியாகி இருக்கிறது.
தற்கொலை செய்யத் துணிந்த ராதிகா.. சப்போர்ட்டுக்கு வந்த அம்மா.. ஈஸ்வரி கேள்வியால் தவிக்கும் பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் இப்ப வரைக்கும் அமிர்தாவாக ரித்திகா நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ரித்திகா ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அண்ணா என்ற சீரியலில் தங்கை கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
அதனால் தான் இப்போது ரித்திகா இந்த சீரியலை விட்டு விலக இருக்கிறாரா? என்றும் அதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏன் திடீரென்று ரித்திகா இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலை விட அண்ணா சீரியலில் ரித்திகாவிற்கு முக்கியமான கேரக்டராக இருக்கலாம் அதனால் ஒருவேளை இவர் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் மனதை சமாதானப்படுத்தி இருக்கும் நிலையில், இதுவரைக்கும் ரித்திகா தான் இந்த சீரியலை விட்டு விலகப் போவது பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை. அதனால் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் உண்மை என்னவென்று.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் பிற மொழி சீரியல்களில் நடப்பது போன்று தான் இங்கேயும் கதை நகர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் இனி அமிர்தா கேரக்டர் தான் இந்த சீரியலில் வில்லியாக வரபோகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதனால் கூட நமக்கு வில்லி கேரக்டர் செட்டாகாது என்று ரித்திகா இந்த முடிவு எடுத்தாரா? என்றும் சிலர் தங்களுடைய சந்தேகங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications