விஜய்யால் பதவியில் தொடர முடியாது? தனுஷ் அரசியல் பாதி வரை.. அனிருத்துக்கு கணித்த ஜோதிடர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிருத், காவ்யா மாறன் திருமணம் குறித்த பேச்சுகள் ஒருபக்கம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், டாரட் கார்டு ரீடர் ஜெயஸ்ரீ பேசிய பழைய வீடியோக்களும் இப்போது மீண்டும் கவனம் பெற்று வருகின்றன. அனிருத் காதல் திருமணம் செய்வார் என்றும், அவருடைய வாழ்க்கைத் துணை தொலைத்தொடர்பு அல்லது ஒளிபரப்புத் துறையுடன் தொடர்புடையவராக இருப்பார் என்றும் அவர் முன்பு கணித்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இப்போது காவ்யா மாறனின் பெயர் அனிருத்துடன் இணைத்து பேசப்படுவதால், அந்த கணிப்பை வைத்து ஜெயஸ்ரீயைப் பற்றியும் விவாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயஸ்ரீ சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் குறித்து பேசியிருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய்யால் தொடர்ந்து அரசியலில் நீடிக்க முடியுமா என்ற கேள்வியை அவர் எழுப்பியிருப்பதுதான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

விஜய் அரசியலில் மாற்றம்

விஜய் அரசியல் பற்றி ஜெயஸ்ரீ பேசுகையில், விஜய் தொடர்ந்து அதே வேகத்தில் செயல்படுவாரா? என்பது கேள்விக்குறிதான். விஜய் சில மாற்றங்களை மேல்மட்டத்தில் செய்திருந்தாலும், இன்னும் அடிப்படை அளவில் மாற்ற வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. அவற்றை முழுமையாகச் சரிசெய்யாவிட்டால் விஜய்க்கே சிக்கல்கள் ஏற்படலாம், அவர் அரசியலில் தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்க முடியாது, இடையிடையே விலகி மீண்டும் வருவது போன்ற சூழல் உருவாகலாம் என்றும் ஜெயஸ்ரீ கூறியிருக்கிறார்.

Jayashree Vijay Dhanush Sivakarthikeyan

இந்தக் கருத்து தற்போது விஜய்யின் அரசியல் பயணம் குறித்த விவாதங்களுடன் சேர்ந்து கவனம் பெற்று வருகிறது. விஜய் இப்போது முதல்வராக இருக்கும் நிலையில் அவரால் தொடர்ந்து முதல்வராக இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஆனால், இது ஜெயஸ்ரீ தனது டாரட் கார்டு வாசிப்பின் அடிப்படையில் தெரிவித்துள்ள தனிப்பட்ட கணிப்புதான். விஜய்யின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இதை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது.

தனுஷின் அரசியல்

அடுத்ததாக நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்தும் ஜெயஸ்ரீ பேசியுள்ளார். தனுஷுக்கு ஆரம்பத்தில் அரசியலில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம் என்றாலும், நீண்ட காலத்துக்கு அவரால் அதில் தொடர்ந்து ஈடுபட முடியாது. அரசியலில் தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான எனர்ஜி கிடையாது. ஆரம்பத்தில் சிறப்பாகச் சென்றாலும் ஒரு கட்டத்தில் தனுஷ் அரசியலிலிருந்து விலகக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் தற்போது சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருடைய அரசியல் வருகை குறித்துப் பல்வேறு பேச்சுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இருப்பினும், அவர் அரசியலுக்கு வருவது தொடர்பாக உறுதியான அறிவிப்பு எதுவும் இல்லாத நிலையில், ஜெயஸ்ரீயின் கருத்தை ஒரு கணிப்பாக மட்டுமே பார்க்க வேண்டும்.

சிவகார்த்திகேயனுக்கு அரசியல்

சிவகார்த்திகேயனைப பொறுத்தவரை, அவருக்கு அரசியலைவிட சினிமாவில்தான் அதிகமான முன்னேற்றம் இருக்கும் என்று ஜெயஸ்ரீ கூறியிருக்கிறார். சினிமாவில் அவர் தொடர்ந்து வளர்ச்சி அடைவதுடன், அவரால் பலர் முன்னேறுவார்கள் அவர் பலருக்கு கை கொடுத்து தூக்கி விடுவார் என்றும் கணித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஏற்கெனவே நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வளர்ந்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் உருவாகும் படங்கள் மற்றும் புதுமுகக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாகவும் இந்தக் கருத்து தற்போது கவனம் பெறுகிறது. இருந்தாலும், அவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா என்பது வேறு விஷயம்.

டாரட் கார்டு மூலம் கணிப்பது எப்படி?

ஜெயஸ்ரீ டாரட் கார்டு ரீடராக பிரபலமாக இருக்கிறார். டாரட் வாசிப்பில் குறிப்பிட்ட அட்டைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் இடம்பெறும் குறியீடுகள் மற்றும் பாரம்பரிய விளக்கங்களின் அடிப்படையில் ஒருவருடைய வாழ்க்கை, உறவுகள், வேலை அல்லது எதிர்கால வாய்ப்புகள் குறித்து வாசிப்பாளர்கள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்வார்கள். இது ஜோதிட கணிப்பிலிருந்து வேறுபட்ட முறையாகும். பிறந்த தேதி, நேரம், இடம் போன்ற விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஜாதகக் கட்டம் அமைப்பதற்குப் பதிலாக, டாரட் கார்டுகளின் குறியீடுகளையும் அவற்றின் விளக்கங்களையும் கொண்டு கணித்து சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+