உமாபதி- ஐஸ்வர்யா எங்கேஜ்மென்ட் புகைப்படத்திற்கு யாஷிகா ஆனந்த் கொடுத்த கமெண்ட்.. குவியும் கேள்விகள்
சென்னை: நடிகர் உமாபதி நடிகர் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யாவை எங்கேஜ்மென்ட் செய்திருக்கிறார். இவர்களுடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிவடைந்து இருக்கும் நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே உமா பதியும் ஐஸ்வர்யாவும் சில மாதங்களாகவே காதலித்து வருகிறார்கள். இந்த தகவல் ஏற்கனவே பலருக்கும் தெரிந்தது தான். இந்த நிலையில் இப்போது இவர்களுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அதை இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக பல நட்சத்திர ஜோடிகள் தாங்கள் ஜோடியாக ஏதேனும் படத்தில் இனைந்து நடித்தால் அவர்களுக்கிடையே காதல் ஏற்படுவது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்று. அஜித்-ஷாலினி, சூர்யா -ஜோதிகா போன்று பல நட்சத்திர ஜோடிகள் அதற்கு உதாரணமாய் இருக்கிறார்கள்.ஆனால் எந்தவித படத்திலும் இணைந்து நடிக்காமல், எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொண்டது கூட கிடையாது.இந்த சூழ்நிலையில் உமாபதி-ஐஸ்வர்யா இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவி வந்தது.
எப்படி இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது என்று பலர் குழப்பத்தோடு இணையத்தில் கேள்விகளை கேட்டு வந்தனர்.ஜீ தொலைக்காட்சியில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வைவல் என்ற ரியாலிட்டி ஷோவை சமீபத்தில் புதிதாக நடத்தி வந்தனர்.

நடிகர் அர்ஜுன் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார்.நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி சர்வைவல் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.தனது தந்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பதால் சர்வைவல் சூட்டிங் பார்ப்பதற்கு ஐஸ்வர்யா அடிக்கடி செட்டுக்கு வருவாராம். அப்பொழுதுதான் உமாபதியின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது.
அப்படி சாதாரண நட்பாக ஆரம்பித்த அவர்களது அறிமுகம் இப்பொழுது காதலில் வந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.சமீபத்தில் தனது சொந்த செலவில் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோவிலை கட்டிய நடிகர் அர்ஜுன் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் தம்பி ராமையாவை குடும்பத்தோடு அழைத்து இருந்தாராம். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தாரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இருவருக்கும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாக நேற்றிலிருந்து பரவி வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் இந்த புகைப்படங்களுக்கு so happy for u two congratulations yayy! என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இது அதிகமான லைக்ஸ் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே யாஷிகா ஆனந்த்தும், உமா பதியும் ஆரம்பத்தில் காதலித்து இருந்தார்கள் என்றும் இப்போது உமாபதி வேறு பெண்ணை நிச்சயம் செய்திருந்த பிறகு யாஷிகா வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்று சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் யாஷிகா ஆனந்த்தை டேக் செய்து இரட்டை அர்த்தங்களில் கமெண்ட்கள் போட்டு வருகின்றனர்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications