யேசுதாஸின் ஹரிவராசனம்.. இந்து இளையராஜா, முஸ்லிம் ஏஆர் ரஹ்மான்? மனிதர்களை பிரிப்பதே இவங்கதான்: பிரபலம்
சென்னை: இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமாக இருந்தாலும் அன்பைதான் போதிக்கிறது. யுத்தத்துக்கான மதம் என்பது எதுவுமே இங்கு கிடையாது. இளையராஜாவை இந்துவாகவோ, ரஹ்மானை முஸ்லீமாகவோ, யேசுதாஸை கிறிஸ்துவராகவோ கருத முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. அத்துடன், பாஜகவின் செயல்பாட்டையும் கடுமையாக சாடியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், 2 எமோஜிகளைப் பயன்படுத்தியிருந்தார்.. சமாதானத்தின் சின்னமான வெள்ளை புறாவை பதிவிட்டிருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் போர்
இதனை பார்த்த நெட்டிசன்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என அவரை கடுமையாக தாக்க தொடங்கினார்கள். கடும் விமர்சனங்களுக்குப் பின் ரஹ்மான் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.
இதுகுறித்து BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், ஏஆர் ரஹ்மானை பொறுத்தவரை, பிறப்பால் இந்து.. சேகர் மாஸ்டரின் மகன்தான் ரஹ்மான்.. தன்னுடைய தாய்க்கு தீராத வயிற்று வலி இருந்தபோது, கோவளம் தர்காவில் சென்று வேண்டிக்கொண்டால் சரியாகிவிடும் என்று ஒரு முஸ்லிம் பெரியவர் சொல்லவும், அதன்படியே தர்காவில் வேண்டி கொண்டார். தாயின் நோய் குணமடைந்ததுமே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்டார்.
ஆலிவ் இலை, புறா
ஏஆர் ரஹ்மானை பொறுத்தவரை யுத்தம் வேண்டாம் என்கிறார்.. ஆலிவ் இலையை காட்டுகிறார், புறாவை காட்டுகிறார், இந்தியாவை காட்டுகிறார்.. ரஹ்மானின் அடையாளமே இந்தியக் கலைஞன் என்பதுதான்.. ஆனால், சங்கிக்கூட்டம் ரஹமான் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்.. ரஹ்மான் முஸ்லிம் என்றால், ஆப்கானிஸ்தான் முஸ்லிமா? பாகிஸ்தான் முஸ்லிமா? பங்களாதேஷ் முஸ்லிமா? அவர் நம்முடைய சகோதரர்.
இந்திய விடுதலைக்கு எத்தனையோ முஸ்லிம்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அத்தனை பேரும் ஒடுக்கப்பட்டவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாக, அடக்கப்பட்ட சமூகமாக மாறுகிறபோது, முஸ்லிம் மதம் சம உரிமை தருகிறது.. கிறிஸ்தவம் கல்வி தருகிறது.. இங்குள்ள இந்து மக்கள், இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் தழுவுவதற்கு இதுவும் ஒரு காரணம்,
கலைஞர்கள் பொதுவானவர்கள்
கலைஞர்கள் அனைவருக்குமே பொதுவானர்கள்.. இவர்களை அனைவருமே ரசிப்பார்கள். அதற்குள் அரசியலை நுழைக்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை.. "இந்து கடைகளில் பொருட்களை வாங்குங்கள்" என்று போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். அப்படின்னா, இங்குள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானிலா கடை வைப்பார்கள்? முஸ்லிம்களை எதிர்க்கக்கூடிய மனநிலைமை, செயற்கையாகவே இங்கு உருவாக்கப்படுகிறது. இது ஆபத்தான போக்கு.
இந்துக்களுக்கு உள்ள அதே உரிமை அனைத்து மதத்தவர்களுக்கும் உள்ளது.. இநதிய அரசியல் சாசன சட்டமும், அவர்களுக்கான உரிமையை வழங்கியிருக்கிறது. இப்போது பாஜகவை பொறுத்தவரை, பாகிஸ்தான் யுத்தத்திற்கு பிறகு, மாற்றான் தோட்டத்துக்கு மக்களை போல பார்ப்பது என்பது அதிகமாக வளர்ந்திருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு இப்படியெல்லாம் கிடையாது..
ஐயப்பனுக்கு ஹரிவராசனம் பாடல்
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமாக இருந்தாலும் அன்பைதான் போதிக்கிறது. யுத்தத்துக்கான மதம் என்பது எதுவுமே இங்கு கிடையாது. இளையராஜாவை இந்துவாகவோ, ரஹ்மானை முஸ்லீமாகவோ, யேசுதாஸை கிறிஸ்துவராகவோ கருத முடியாது.
ஹரிவராசனம் பாட்டை யேசுதாசைவிட சிறப்பாக வேறு யாராலும் பாடிவிட முடியாது. ரஹ்மானும் சரி, இளையராஜாவும் சரி, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய கலைஞர்களாக மட்டுமே கருத முடியும். மதம் கடந்து மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் சில சங்கிகள்தான், மனிதர்களை பிரிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications