நீயா நானாவில் கோபிநாத் அன்றைக்கு 16 மணி நேரம் பேசினாரு.. கடைசியில் இப்படி ஆகிவிட்டது! பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி பற்றி பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் பரவி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குசிலி பேமிலி (kusili family )என்ற யூடியூபர் நீயா நானா நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது பற்றி தன்னுடைய youtube சேனலில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி பற்றிய பேச்சு தான் இப்போது அதிகமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மும்மொழிக் கொள்கை பற்றிய விவாதம் நடைபெறுவதற்காக நீயா நானா நிகழ்ச்சியில் அறிவிப்பு வெளியானது. இதில் பல மக்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஆனால் இதில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கிறது.

யூடியூபர் ஜெனி வருத்தம்
அதற்கு காரணம் இதுவா இருக்கும்? அதுவாக இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் சமையல் யூடியூப்பர்கள் மற்றும் அவர்களை பாலோ செய்யும் பாலோவர்ஸ்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரபல சமையல் யூடியூபரான ஜெனி தனக்கு பேசுவதற்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் இனி நிகழ்ச்சிக்கு போகிறவர்கள் கையில் ஒரு மைக் எடுத்துக்கொண்டு போங்கள் என்று பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குசிலி பேமிலி என்ற யூடியூபர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நீயா நானா இனி நிகழ்ச்சியில் நடக்கும் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
வாய்ப்பு இப்படித்தான் கிடைத்தது
பொதுவாக நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டாலும் அவர்களுக்கு எப்படி கலந்து கொள்ள வேண்டும் என்று தெரியாது அதற்கு அவர் விளக்கம் கொடுத்திருகக்கிறார். அதில் விஜய் டிவியில் ஒரு டாப்பிக் கொடுத்து அதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த நம்பரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு நம்பர் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த நம்பருக்கு தான் போன் செய்து பேசினாராம். அப்போது அவர்கள் சில கேள்விகளை கேட்டு விட்டு பிறகு நாங்கள் உங்களை கூப்பிடுகிறோம் என்று சொல்லி போனை வைத்து விட்டார்களாம்.
நிகழ்ச்சியின் தொடக்கம்
அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து போன் செய்தார்களாம். நிகழ்ச்சி நடக்கும் நாள் 8 மணிக்கு போனபோது காலை டிபன் ரெடி பண்ணி இருந்தார்களாம். சாப்பிட்டு முடித்து சூட்டிங் ரூம்க்கு போன போது பல கேமராக்கள் சுற்றி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் கழித்து கோபிநாத் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
அனைவருக்கும் சம உரிமை
ஆரம்பத்தில் எல்லோரிடமும் எங்கிருந்து வரீங்க யார் என்ற விவரங்களை கேட்டுவிட்டு பிறகு நிகழ்ச்சிக்கான டாபிக் குறித்த விவாதம் தொடங்கப்பட்டிருக்கிறது. அடுத்த நாள் விடிய காலை 3 மணிக்கு தான் முடிவுக்கு வந்ததாம். காலையில் 10:00 மணியில் இருந்து விடியற்காலை 3 மணி வரைக்கும் கோபிநாத் நின்று கொண்டே தான் இருந்தாராம்.
கோபிநாத்தின் பேச்சு
ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் சேரில் உட்கார்ந்திருந்தாராம். மற்ற இடங்களில் அவர் நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்தாராம். அவர் கத்தி கத்தி பேசுவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்ததாம். அவருடைய துல்லியமான பேச்சு மற்றும் குழந்தைகளை கண்டிக்கும் விதமும் என்னை வியக்க வைத்தது. எனக்கு அவர் மீது இருந்த மதிப்பு கூடி இருந்தது என்று கூறியிருக்கிறார்.
நினைத்தது நடக்கவில்லை
கண்டிப்பாக அவரிடம் செல்ஃபி எடுக்கும் போது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் விடியற்காலை 3 மணி ஆனதும் அவரால் நிற்க கூட முடியாமல் டயர்டாகி ஷூட்டிங் ரூமில் இருந்து வெளியே போய்விட்டார். அதனால் எங்களால் போட்டோ எடுக்க முடியவில்லை. அதுபோல சமையல் யூடியூப்பர் ஒருவர் அவருடைய சேனலில் நீயா நானா நிகழ்ச்சிக்கு போனால் மைக் கொண்டு போக வேண்டும் என்று பேசி இருந்தார். எனக்கு அதற்கு உடன்பட முடியாது.
யூடியூபருக்கு பதிலடி
காரணம் நாம இந்த நிகழ்ச்சிக்கு போகிறோம் என்றால் நமக்கு கிடைக்கும் சின்ன வாய்ப்பையும் நாம் விட்டுவிடாமல் பேச வேண்டும். அடுத்தவர்கள் பேசுகிறார்கள் என்றால் அதில் நம்முடைய கருத்து சொல்வதற்கு ஏதாவது இருந்தால் நாம் மைக்கை கேட்டால் உடனே அவர்கள் தர போகிறார்கள். அதை நாம் பேசலாமா ஆனால் மைக்கை நானே கேட்காமலேயே எனக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்று எப்படி சொல்லிக் கொண்டிருக்க முடியும்.
சுத்தம் குறித்து விளக்கம்
கோபிநாத் இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த எபிசோடில் பேசியிருந்தார். ஆனாலும் சிலர் அவரை குறை சொல்லும் விதமாக பேசி இருப்பது வருத்தமாக இருக்கிறது. அதுபோல இன்னொரு யூடியூபர் அந்த சூட்டிங் நடக்கும் இடம் மட்டும் கிளீனாக இருக்கு, அதன் பக்கத்தில் ரொம்பவும் குப்பையாக இருக்கிறது என்று அவருடைய வீடியோவில் பேசியிருந்தார். ஆனால் அதுவும் முழுக்க உண்மை கிடையாது சூட்டில் நடந்து கொண்டிருக்கும் போது பெருக்கிக் கொண்டும், மாப் போட்டுக் கொண்டும் இருந்தார்கள் அதை நானே கவனித்தேன் என்று அந்த யூடியூபர் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications