“திருடா திருடி“ பட நடிகை சாயா சிங் நடிக்கும் புது சீரியல்..அதுவும் இத்தனை பிரபலங்களா? ஆரம்பமே அசத்தல்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது. சமீபத்தில் மௌனம் பேசியதே என்ற சீரியல் புதியதாக ஒளிபரப்பாக தொடங்கியது.

இதை தொடர்ந்து மனசெல்லாம் என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிப்பரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோவுடன் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் கெட்டிமேளம் என்ற பெயரில் மற்றுமொரு புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் ஜீ தமிழ் வரலாற்றில் முதல் முறையாக 1 மணி நேர எபிசோடாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் சிப்பு சூரியன், விராட், சாயா சிங், பொன்வண்ணன் மற்றும் ப்ரவீனா என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு ப்ரோமோ வீடியோ மூலமாகவே உச்சம் பெற்றுள்ளது. இந்த சீரியல் ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுபோல இந்த சீரியலில் நடிகை பிரவீனா- லட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல நடிகர் பொன்வண்ணன்- சிவராமன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். திருடா திருடி திரைப்படத்தின் மூலம் பிரபலமான சாயாசிங்- துளசி கேரக்டரில் நடிக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் நடித்த நடிகர் சிபு வெற்றி கேரக்டரில் நடிக்கிறார்.
அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா சீரியலில் கதாநாயகனாக நடித்த விராட் -மகேஷ் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை சௌந்தர்யா- அஞ்சலி கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் இந்த சீரியல் ரசிகர்களை அதிக எதிர்பார்ப்படைய வைத்திருக்கிறது.

-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications