SaReGaMaPa: வந்தாச்சு.. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 எப்போ இருந்து தெரியுமா? இந்த சீசனில் இருக்கும் சிறப்புகள்!
சென்னை: மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ஜீ தமிழின் பிரம்மாண்ட இசை போட்டி தொடரான 'சரிகமப', இப்போது குழந்தைகளுக்கான புதிய சீசனுடன் மீண்டும் வரவிருக்கிறது! சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 வெற்றியுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக 'சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5' தொடங்கவிருப்பதாக ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் இருந்து மெகா ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் நட்சத்திரங்களுடன், இந்த பிரம்மாண்டப் பயணம் வரும் டிசம்பர் 6-ம் தேதி அன்று தொடங்குகிறது.

சீசன் 5 பற்றிய விவரங்கள்
இந்த சீசனில் உங்க வீட்டு குட்டீஸ்களின் இளம் இசைத் திறமைகளை உலகம் காணவிருக்கிறது. சரிகமப நிகழ்ச்சிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர் அவர்களை என்டர்டைன்மென்ட் செய்வதற்காக வழக்கம் போல இந்த சீசனையும் விஜே அர்ச்சனா தொகுத்து வழங்க வருகிறார்.
அதுபோல நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன், சைந்தவி, மற்றும் எஸ்.பி.பி சரண் இருக்கிறார்கள். டிசம்பர் 6ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இரவு 7 மணி முதல் 8:30 மணி வரை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 வெற்றியாளர்கள்
முந்தைய சீசனில் வெற்றி பெற்ற இளம் திறமையாளர்கள் யார் என்பதை ஒரு ரவுண்ட் அப் பார்ப்போமா?. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4-ன் வெற்றியாளர் திவினேஷ். இவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார். இரண்டாம் இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாம் இடத்தை ஹேமித்ரா ஆகியோர் பிடித்திருந்தனர்.
'சரிகமப' நிகழ்ச்சி பல வருடங்களாகத் தொடர்ந்து சாமானிய மக்களின் இசைத் திறமைக்கு ஒரு பிரம்மாண்டமான மேடையாக விளங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாகப் பிரபலமடைந்தப் பலர் பின்னணிப பாடகர்களாக மாறியிருக்கிறார்கள். சரிகமப சீனியர்ஸ், லிட்டில் சேம்ப்ஸ் போன்ற சீசன்களின் மூலமாகப் பல போட்டியாளர்கள் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகளை கைப்பற்றியுள்ளனர். இதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பலர் சினிமா துறையில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளனர்.
சரிகமப நிகழ்ச்சி சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்தப் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. உதாரணமாக, சீசன் 4 வெற்றியாளர் திவினேஷ் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தாவின் மூலமாகத் தான் இசைத் திறமை வந்தது. இவருக்குக் கிடைத்தப் பரிசுத் தொகை மற்றும் நடுவர்கள் வழங்கிய உதவிகள் (பாடகர் ஸ்ரீநிவாஸ் இவருக்கு 6 லட்சம் மதிப்புள்ள கார் வாங்கிக் கொடுத்தது போன்றவை) அவருடைய குடும்பத்தின் நிலையையே மாற்றியுள்ளது. இப்படிச் சினிமா பின்னணி இல்லாத பல திறமையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சி வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications