கெட்டிமேளம்: துளசி வீட்டிற்கு வந்த ஈஸ்வரமூர்த்தி.. கோபத்தில் கொதிக்கும் வெற்றி - இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அப்பா வீட்டிற்கு வந்த மீனா ஆக்சிடெண்டில் மாப்பிள்ளை இறக்க துளசி கல்யாணம் நின்று போன விஷயத்தை சொல்ல ஈஸ்வரமூர்த்தி இதை கவனித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது,ஈஸ்வர மூர்த்தி துளசியின் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க திட்டம் போடுகிறார், அடுத்து தன்னுடைய மனைவியுடன் சிவராமன் வீட்டிற்கு வருகிறார்.
இங்கே வீட்டில் துக்கம் விசாரித்து உங்களுக்காக எப்பவும் நான் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி ஒரு ட்ராமாவை அரங்கேற்றுகிறார். இவங்களை எப்பவும் நம்ம கைக்குள்ளவே வச்சுக்கணும் என யோசிக்கிறார்.

அடுத்து துளசியும் தியாவும் ஹாஸ்பிடலுக்கு சென்று வீட்டிற்கு வர இதை பார்த்த எம்.எல்.ஏ இந்த பெண்ணையும் நம்ம கட்டுப்பாட்டில் வச்சுக்கணும் என திட்டம் போடுகிறார்.
அடுத்து எம். எல்.ஏ கிளம்பி வரும் போது அவரது மனைவி துளசியோட மாப்பிள்ளையை கொன்றவனை நீங்க தான் கண்டு பிடிக்கணும் என்று சொல்ல எம்.எல்.ஏ அதிர்ச்சி அடைகிறார்.
இங்கே வீட்டில் வெற்றியின் அண்ணனிடம் அண்ணி எங்க போனாலும் உங்களை விட்டுட்டு போறாங்க என்று சத்தம் போட்டு கொண்டிருக்க வெற்றி வீட்டிற்கு வருகிறான். என்னாச்சு அண்ணி என்று கேட்க துளசி வீட்டிற்கு அப்பாவும் அம்மாவும் சென்று இருக்கும் விஷயத்தை சொல்ல இதை கேட்டு வெற்றி கோபப்படுகிறான்.

வீட்டிற்கு வந்த ஈஸ்வரமூர்த்தி எல்லாம் அரசியல் உள்நோக்கம் என தான் உண்மையை சொல்லாமல் சமாளிக்கிறார். அடுத்து அஞ்சலியின் காலேஜில் பெரிய கட் அவுட் வைத்திருக்க அஞ்சலி அதை அன்னாந்து பார்த்தபடி கையில் இருக்கும் பேப்பரில் மகேஷ் என்பவர் கொடுத்த பேட்டியை படித்தபடி இருக்கிறாள்.
இந்த சமயத்தில் கல்லூரி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மகேஷ் உள்ளே நுழைய முகத்தை பார்க்காத அஞ்சலி கவின் என நினைத்து மகேஷ் கையை பிடித்து கட் அவுட்டை பார்த்து பேசுகிறாள். மகேஷ் அஞ்சலியை பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் கொள்கிறான்.
அடுத்து அஞ்சலி மகேஷ் முகத்தை பார்த்து விட்டு பதறியடித்து ஓடி விடுகிறாள். பாட்டு போட்டி தொடங்குகிறது. ஒவ்வொருத்தராக பாட்டு பாட இறுதியாக அஞ்சலி பாடுகிறாள். மகேஷ் அவளையும் அவள் பாடலையும் ரசித்தபடிபார்க்கிறான்.

கவின் அஞ்சலி பாடி முடித்ததும் காதல் கடிதத்தை கொடுத்து காதலை சொல்ல திட்டமிட்டு இருக்க அஞ்சலி பாடி முடிக்கும் சமயத்தில் நண்பர்கள் கவின் கையில் இருக்கும் லெட்டரை புடிங்கி கொண்டு ஓடி விட கவினும் அவர்களை துரத்தி செல்கிறான்.
இங்கே அஞ்சலி பாடி முடித்து மகேஷ் கையால் பரிசு வாங்குகிறாள், அவளது கண்கள் கவினை தேடுகின்றன. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications