கெட்டி மேளம்: தியாவை கொடுமைப்படுத்தும் ஜெகன்.. கண்ணீருடன் துளசி, வெற்றிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மோனிகா மற்றும் ஜெகன் தியாவை பிரித்து அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, போலீஸ் ஸ்டேஷனில் துளசி எனக்கும் தியாவுக்கும் சம்மந்தம் இல்லை என்று கையெழுத்து போட்டு கொடுத்த பின்னரும் சிவராமன், லக்ஷ்மியை வெளியே விடாமல் அலை கழிக்கின்றனர்.

zee tamil chayasingh gettimelam serial

பிறகு போயிட்டு லாயரோட வாங்க என்று துளசியை அனுப்ப நைட் நேரம் ஆனதால் லட்சுமி மற்றும் சிவராமன் என இருவரும் நீ எங்களை பத்தி கவலைப்படாத, வீட்டுக்கு போ மா என்று அனுப்பி வைக்கின்றனர்.

வீட்டிற்கு வந்த துளசி தனது அண்ணனிடம் உதவி கேட்க ரகுராமன் அமைதியாக இருக்கிறான், பிறகு அண்ணி மீனாவிடம் உங்க அப்பா கிட்ட கொஞ்சம் பேசி பாருங்க என்று சொல்ல ரூமுக்குள் சென்ற மீனா அப்பாவுக்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை.

zee tamil chayasingh gettimelam serial

வெளியே வந்த மீனா அப்பாவிடம் பேசிட்டேன், அவர் எல்லாத்தையும் பார்த்துப்பார் என்று பொய் சொல்லி விடுகிறாள். கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் சிவராமன், லக்ஷ்மியை வீட்டிற்கு மரியாதையோடு அழைத்து வந்து மன்னிப்பு கேட்டு விட்டு செல்கின்றனர். மேலும் பெரிய பாஸிடம் சொல்லிடுங்க என்று கிளம்பி செல்கின்றனர்.

துளசி என்னாச்சு என்று கேட்க பிளாஷ்கட்டில் இன்ஸ்பெக்டருக்கு ஒரு போன் கால் வர அவர் பதறி போய் உடனே ரிலீஸ் செய்து விடுகிறேன் என்று மன்னிப்பு கேட்டு அழைத்து வந்த விஷயம் தெரிய வருகிறது. மீனாவின் அப்பா தான் அந்த பாஸ் என நினைத்து மீனாவுக்கு நன்றி சொல்ல அவளோ குழப்பத்தில் நிற்கிறாள்.

zee tamil chayasingh gettimelam serial

அடுத்து குழந்தை குறித்து கேட்க துளசி கண் கலங்கி நிற்கிறாள். ரூமுக்கு சென்று குழந்தையின் போட்டோக்களை பார்த்தும் கலங்கி நிற்கிறாள். அடுத்த நாள் கோவிலுக்கு வரும் வெற்றி இன்னைக்கும் என் மனசுக்கு பிடித்த பொண்ணை கண்ணுல காட்டு ஆண்டவா என்று சொல்லி வேண்ட துளசி தியாவுக்காக வேண்டி கொள்ள கோவிலுக்கு வருகிறாள்.

zee tamil chayasingh gettimelam serial

அப்போது வெற்றி துளசியை பார்த்து சந்தோசப்பட்டு கண்ணை மூடி கடவுளுக்கு நன்றி சொல்லி கண் திறக்க துளசி காணாமல் போக வெற்றி அவளை தேடி அலைகிறான். மறுபக்கம் ஜெகன் மற்றும் அவனது அம்மா என இருவரும் சேர்ந்து மோனிகாவின் மனதை மாற்றி தியாவை வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்த தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+