விஜய் பட டைட்டிலில் என்ட்ரி கொடுக்கும் புதிய சீரியல்.. நேரம் மாறும் ஜீ தமிழ் சீரியல்கள்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது Zee தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. சேனலும் தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றன. சமீபத்தில் அயலி என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்ததாக வாரிசு என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியல் வரும் ஜூன் 30-ம் தேதி முதல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு சீரியல் காரணமாக மௌனம் பேசியதே சீரியல் இனி 3 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயகனின் பாட்டி தனது திறமையாலும் தியாகத்தாலும் கட்டி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை தனது பேரன் அக்கறையில்லாமல் இருப்பதால் தனக்கு அடுத்ததாக சரியாக வழிநடத்திக் கொண்டு செல்லப் போவது யார் என்று தெரியாமல் தவிக்கிறார்.
இந்த சமயத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாயகி தமிழுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க கழுத்தை நெரிக்கும் கடன் காரணமாக அவரது அப்பா தலைமறைவாகி விட இந்த கல்யாணம் நின்று போகின்றது. இதனால் தமிழ் தனது குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் தாங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இப்படியான சூழலில் ஹீரோ சிபி உடன் தமிழ் எப்படி ஜோடி சேருகிறாள்? பாட்டி சாம்ராஜ்யத்தை வழி நடத்த வந்த தமிழ் குடும்பத்தையும் ஒன்றிணைத்து செய்வாளா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க இதே ஜூன் 30-ம் தேதியில் இருந்து இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் மீண்டும் 10:00 மணி வரை ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகை தீபம் சீரியலில் முதல் பாகம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாட்டியின் பேரன் தான் தன்னுடைய கணவர் ராஜா என்ற உண்மை இப்போது கதாநாயகிக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் அடுத்து அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் நேர மாற்றம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். டிஆர்பியில் டாப் 10 இடங்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்கு நேரம் மாற்றம் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கருத்துகள் வருகிறது. அதுபோல வித்தியாசமான கதை அம்சத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் வாரிசு சீரியலுக்கு மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications