ஜீ தமிழில் தொடங்கும் சரிகமப சீனியர் 5.. ஆனால்! இப்படி ஒரு மாற்றம், அதுவும் எப்போது? வெளியான அறிவிப்பு
சென்னை: ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஜீ தமிழ் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஜீ தமிழ் வெளியிட்டு இருக்கிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே புதியது புதியதாக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதில் அடுத்தடுத்த சீசன்களும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதுபோல மக்கள் மத்தியில் டான்ஸ் மற்றும் பாட்டு நிகழ்ச்சிக்கு என்று அதிகமானோர் இருக்கிறார்கள்.

பீல் பண்ணும் ரசிகர்கள்
சீரியல்களில் எப்போதும் அழுகாட்சி காட்சிகளை பார்த்து கண்ணீர் வற்றிப்போன ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பலருடைய திறமையை பார்த்து வியந்து வருகிறார்கள். நாமும் இதுபோல சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பலருக்கு உருவாகுகிறது. ஆனால் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களை அழ வைத்து அடுத்த நாள் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு நிகழ்ச்சியை பாலோ பண்ண வைப்பதற்காகவே புது ட்ரிக் ஃபாலோ பண்ணி வருகிறார்கள்.
சரிகமப நிகழ்ச்சி வெற்றி
அதிலும் ஜீ தமிழில் சொல்லவே வேண்டாம். சமீபத்தில் முடிவடைந்த சரிகமப ஜூனியர் லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் பாடலால் மக்கள் மனதில் கவர்கிறார்களோ இல்லையோ அவர்களுடைய சொந்தக் கதை, சோக கதையை சொல்லி ரசிகர்களை ஐயோ பாவம் என்று சொல்ல வைத்து விட்டார்கள். இது கூட சில நேரங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. என்னதான் உண்மையான திறமை இருந்தாலும் அதைவிட அவர்களுடைய பின்புலம் மிகவும் கஷ்டமாக இருந்தால் அவர்களுக்கு தான் அதிக சப்போர்ட் இருக்கிறது, ஒரு சிலர் தங்களைப் பற்றி வெளியே சொல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதாக ஆதரவு கிடைப்பதில்லை என்றும் சிலர் வருத்தத்தை பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
சரிகமப சீனியர் சீசன் 5
இது ஒரு பக்கம் இருக்க தற்போது ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருப்பதற்கான அதிகாரப்பூர்வமான ப்ரோமோவை அறிவித்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வருகின்ற மே 24ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வழக்கம் போல சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதுபோல இந்த சீசனில் வழக்கம்போல அர்ச்சனாவே தொகுப்பாளினியாக களம் இறங்கி இருக்கிறார்.
சைந்தவி மிஸ்ஸிங்
அதுமட்டுமல்லாமல் நடுவராக பாடகர் ஸ்ரீனிவாஸ், கார்த்திக் விஜய், பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மேனன் ஆகியோர் நடுவர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரைக்கும் சைந்தவி பெயர் தற்போது வந்த ப்ரோமோவில் இல்லை. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சைந்தவி இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது. சைந்தவி இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications