Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரீல் டு ரியல் ஜோடி.. திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்.. என்ன மாதிரி யோசிச்சிருக்காங்க? கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்திருக்கின்றனர்.

அது வேறு யாரும் இல்லை தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டி மற்றும் மலர் கேரக்டரில் நடித்த நடிகர் பிரிட்டோ மற்றும் நடிகை சந்தியா தான்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவர்களுடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிவடைந்திருந்த நிலையில் நேற்று திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.

Zee Tamil Thavamai Thavamirundhu serial actors Britto and Sandhya marriage

பொதுவாக சின்னத்திரையாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அந்த மாதிரி தான் தற்போது பல சின்னத்திரை பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது புதியதாக ஒரு "ரீல் டு ரியல்" ஜோடி இடம் பிடித்திருக்கின்றனர். ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியலில் மலர் மற்றும் பாண்டி வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து இருப்பார்கள். அதுபோலவே இவர்கள் நிஜத்திலும் காதலித்து தான் தற்போது திருமணம் செய்து இருக்கின்றனர். இவர்களுடைய திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

Zee Tamil Thavamai Thavamirundhu serial actors Britto and Sandhya marriage

இந்த நிலையில் சந்தியாவிற்கு நேற்று பிறந்த நாளாம். அதே நாளில் அவரை காதல் மனைவியாக பிரிட்டோ கரம் பற்றி இருக்கிறார். இந்த நிலையில் தொடர்ச்சியாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு தங்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கனா காணும் காலங்கள் மூலமாகத்தான் ட்ரிட்டோ சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார். அதே நேரத்தில் தவமாய் தவமிருந்து சீரியலில் அதிகமான ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். காரணம் இவர் ஒரு பாசிட்டிவ்வான மருமகன் கேரக்டரில் தன்னுடைய மாமனார் மார்க்கண்டேயனுக்கு பக்க பலமாக இருந்து வந்தார். சொந்த மகள் கூட மார்க்கண்டேயன் பக்கம் இல்லாத நேரத்தில் இவர் ஒரு மகனாக அவர் கூடவே இருந்ததாலே அதிகமான ரசிகர்கள் இவருடைய நடிப்பை பாராட்டி கொண்டிருந்தனர்.

Zee Tamil Thavamai Thavamirundhu serial actors Britto and Sandhya marriage

ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை தற்போது தவமாய் தவமிருந்து சீரியல் புதியதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதில் பிரிட்டோ மற்றும் சந்தியா இருவரும் சீரியலை விட்டு விலகி இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள், பிரபலங்கள் தொடர்ச்சியாக இவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் குவிக்கின்றனர்.

Zee Tamil Thavamai Thavamirundhu serial actors Britto and Sandhya marriage

ஏற்கனவே பிரிட்டோ மற்றும் சந்தியா இருவரும் தங்களுடைய எங்கேஜ்மெண்டை கடந்த ஜனவரி 25ஆம் தேதி முடித்திருந்தனர். ஆனால் அந்த புகைப்படங்களை எல்லாம் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டு இருந்தனர். எளிமையாக முடிவடைந்த எங்கேஜ்மெண்டை ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது தங்களுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்து இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+