விஜய் டிவி சீரியல் நடிகைக்கு சோதனை! மீண்டும் மீண்டும் இப்படியா நடக்கணும்? முடிவுக்கு வரும் சீரியல்
சென்னை: ஜீ தமிழில் நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் இன்றுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கி ஆறு மாதம்தான் ஆகிறது. அதற்குள் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்பு எல்லாம் சீரியல்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அப்படி கிடையாது இணையத்தில் எப்போதும் சீரியல் பார்க்கலாம் என்பதால் ஆண்களும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதேபோல சீரியலை ட்ரோல் செய்ய வேண்டும் என்பதற்காக கூட சிலர் பார்த்து வருகிறார்கள்.

அதனாலயே நாளுக்கு நாள் சீரியல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எப்படியாவது டிஆர்பியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக சீரியலில் லாஜிக்கே இல்லாமல் கூட சிலர் கதை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில சீரியல்கள் வந்த வேகத்திலேயே எதிர்பார்க்காத விதமாக முடிவுக்கு வந்து விடுகிறது.
அந்த வகையில் தான் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலும் முடிவுக்கு வருகிறது. இந்த சீரியல் ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலின் ரீமேக் தான். இந்த சீரியலில் கதாநாயகியாக ரேஷ்மா முரளிதரன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ரேஷ்மா முரளிதரன் ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியில் தான் முதன் முதலில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் இருக்கும்போது அவருக்கு பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அபி டெய்லர் போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். அந்த நேரத்தில் தான் சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவுமான மதன் பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் இருவரும் ஜோடியாக தான் அபி டெய்லர் சீரியலில் நடித்தனர். அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் சீரியலில் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் ஜீ தமிழில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலும் முடிவுக்கு வருகிறது.

இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் ஏன் இந்த திடீர் முடிவு என்று வருத்தத்தோடு இணையத்தில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஆனால் டிஆர்பி ரேட்டிங் குறைவாக பெற்றதுதான் இந்த சீரியல் முடிவுக்கு காரணமா? என்ற கேள்விகளும் எழும்பி வருகிறது. நடிகர் ஜெய் ஆகாஷ் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். இப்போது அவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் திடீரென்று முடிவுக்கு வருவதும் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications