பிரைம் டைம் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகன்.. அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு! காரணம் இதுதானா!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியாராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சுர்ஜித் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் சந்தியா ராகம் சீரியல் துவங்கப்பட்டது. இந்த சீரியல் ரொமான்டிக் மற்றும் குடும்ப கதையை மையமாக வைத்து தொடங்கப்பட்டது. இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த சீரியலை பிரதாப் மணி என்பவர் இயக்கி வரும் நிலையில் சந்தியா ஜகர்ல்லாமுடி கதாநாயகியாக நடிக்கிறார். அதுபோல அந்தாரா சுவர்ணாக்கர், புவனா லஸியா, தனலட்சுமி, ராஜு பரமேஸ்வர, சுர்ஜித் குமார் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்ப வரைக்கும் இந்த சீரியல் சுமார் 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சுர்ஜித் குமார் தான் திடீர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
எதிர்நீச்சல் 2வில் நான் இல்ல! அதிரடி போஸ்ட் போட்ட விசாலாட்சி.. இவங்களுமா இப்படி! அட காரணம் இதுதானா?
சுர்ஜித் குமார், சீனு என்ற கேரக்டரில் நடித்து வந்தார். அது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவில் கடவுள் எல்லாவற்றையும் ஒரு காரணத்திற்காகவே செய்கிறார். என் சந்தியா ராகம் குடும்பத்தை விட்டு விலக உள்ளேன். என்னுடைய நிஜ குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு இது.

இயக்குனர், தயாரிப்பாளர், ஜீ தமிழ், என்னுடன் பணியாற்ற நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை நம்பி என்னை இந்த கதாபாத்திரமாகவே உணர வைத்து நடிக்க அனுமதித்த அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்களிடமிருந்து இது மாதிரி ஒரு அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். சுர்ஜித் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மேலும் இந்த சீரியலை விட்டு சுர்ஜித் விலகுவது நம்ப முடியவில்லை... ஏன் இந்த சீரியலில் இருந்து விலகுகிறீர்கள்?

உங்கள் கேரக்டரில் மற்ற யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று அதிகமான கமெண்ட்கள் குவிவதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பே சுர்ஜித் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அது குறித்து இந்த சீரியலில் உள்ள ஒரு சிலரிடம் விசாரித்த போது இந்த தகவல் சில நாட்களாகவே வலம் வருகிறது, ஆனால் சேனல் தரப்பில் சுர்ஜித் கேரக்டரில் இன்னும் யாரையும் நடிக்க வைக்கவில்லை என்று கூறி வந்தனர்.
அதனால் சுர்ஜித் மீண்டும் இந்த சீரியல் தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அவர் அதிகாரப்பூர்வமாக போஸ்ட் போட்டு இருக்கிறார். ஆனாலும் இனி அவருடைய சொந்த வாழ்க்கையிலும், அவருடைய அடுத்த ப்ராஜெக்ட்டும் வெற்றி அடைய நம்முடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்ளலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications