வயநாட்டில் எல்லா இடத்திலும் நிலச்சரிவா? எங்கெல்லாம் பாதிப்பு.. தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவ தொடங்கி உள்ளன. அதோடு வயநாட்டில் முழுக்க எல்லா பகுதிகளிலும் நிலச்சரிவு போல செய்திகளும் வருகின்றன. ஆனால் அதில் எல்லாம் உண்மை இல்லை. வயநாடு நிலச்சரிவு தொடர்பான முக்கியமான 10 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
1. இன்று அதிகாலை மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை.

2. சுல்தான் பத்தேரி, கல்பேட்டா போன்ற இடங்களில் நிலச்சரிவு இல்லை. அதற்கான சுவடு கூட இல்லை. ஒப்பீட்டளவில் இவை கொஞ்சம் சமதளமான இடங்கள்.
3. அங்கே சரியாக நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று பகுதிகள் இந்த புகைப்படத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன.
4. இரண்டு முறை அங்கே நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் இன்று மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிக வீடுகள் உள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
5. இப்போது வரை பலி எண்ணிக்கை 50. ஆனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. எண்ணிக்கை 200ஐ தாண்டலாம் (குறைந்தபட்சம்)
6. கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. இன்று அதிகாலை மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில்தான் அதிக பேர் சிக்கி உள்ளனர்.
7. 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எப்படி 1000 பேர் கணக்கு என்று கேட்கலாம். 400 குடும்பங்கள் கணக்கு வைத்து.. கிட்டத்தட்ட 1000 பேருக்கும் அதிகமானோரை இதுவரை அங்கே காணவில்லை என்று உள்ளூர் கணக்குகள் சொல்கின்றன .
8. எப்படி ஏற்பட்டது.. முண்டக்காய் நகரில் நள்ளிரவு 1 மணியளவில் கனமழையின் போது முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 4 மணியளவில் சூரல் மாலா பள்ளி அருகே இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. முகாமாக செயல்படும் பள்ளி, அருகில் உள்ள வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர், சேறும் சகதியுமாக இருந்தது.
9. கேரளாவில் 2019ல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 121 பேர் பலியாகினர். தற்போது மீண்டும் அங்கே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
10. மீட்பு பணிகள்: ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ஹெலிகாப்டர்கள் வயநாடு சென்றுள்ளன. சுல்தான் பத்தேரி செயின்ட் மேரி கல்லூரியில் பரபரப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அங்கு சூரல்மாலா-முண்டக்காய் பேரிடரை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் அவசர மருத்துவ முகாம் வருகிறது. முண்டக்கையில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சுல்தான் பத்தேரியில் உள்ள செயின்ட் மேரி கல்லூரியில் உள்ள ஹெலிபேடிற்கு கொண்டு வரப்படுவார்கள். முகாமில் இருந்து, உடல்கள் பிணவறைக்கு மாற்றப்படும் பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களையும் தன்னார்வத் தொண்டர்களாகப் பதிவு செய்து, பாரிய வெளியேற்றம் மற்றும் சுகாதாரப் பணிகளில் உதவுமாறு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications