Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உள்ளாடைக்குள்".. மிரண்டு போன பெண் ஆபீஸர்ஸ்.. திருதிருவென விழித்த 19 வயது ஷகிலா.. ஒரு கோடி ரூபாயாம்

உள்ளாடையில் தங்கம் கடத்தி வந்த 19 வயது ஷகிலாவை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 19 வயதான ஷகிலா என்ற பெண், கேரள போலீசாரின் விசாரணை பிடிக்குள் சிக்கி உள்ளார்.. இந்த பெண்ணின் நடவடிக்கையை கண்டு கஸ்டம்ஸ் அதிகாரிகளே திகைத்து போயுள்ளனர்.. என்ன நடந்தது கேரள மாநிலத்தில்?

நாடு முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள்.

அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்..

நூதனமான நூதனம்

நூதனமான நூதனம்

இது அனைத்து ஏர்போர்ட்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதனால்தான் கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வருகிறார்கள். துபாய், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பல்வேறு வடிவில் மறைத்து கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.. அதிலும் டிசைன் டிசைனாக நூதன வழிகளில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி விட்டது.

தங்க பிஸ்கட்கள்

தங்க பிஸ்கட்கள்

ஆண்கள் என்றால், அயன் படத்தில் வருவதுபோல, "தங்க மாத்திரைகளை" விழுங்கி விடுகிறார்கள்.. கேப்சூல்களில் தங்க துகள்கள் நிரப்பப்பட்டு, அவைகளை வயிற்றில் விழுங்கி, ஃபிளைட் ஏறி வருகிறார்கள்.. பெண்கள் என்றால், உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து எடுத்து வருகிறார்கள்.. உள்ளாடை என்பதால், அதிகாரிகள் யாரும் சோதனை செய்ய மாட்டார்கள் என்றே நம்புகிறார்கள்.. இவர்களும் போலீசில் சிக்கி அசிங்கப்பட்டுவிடுகிறார்கள் என்பதே உண்மை.

தங்க மாத்திரைகள்

தங்க மாத்திரைகள்

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் ஒன்று சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்தது.. அதில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனர். அதில் 3 பெண்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.. எனவே 3 பேரையும் தனித்தனியாக அழைத்து கேள்விகள் கேட்டனர்.. 3 பேருமே உளறினார்கள்.. முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.. இதனால் பெண் சுங்க அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, மீண்டும் அந்த 3 பெண்களையும் தனியாக உள்ளே அழைத்து வந்து சோதனையிட்டனர்.

விக் விக் விக்

விக் விக் விக்

அப்போது அந்த பெண்கள் தலையில் அணிந்திருந்த விக் மீது சந்தேகம் வந்தது.. காரணம் 3 பேருமே சொல்லிவைத்தாற்போல் விக் அணிந்திருந்தனர்... அவர்களின் சொந்த தலைமுடியே அழகாக இருக்கும்போது, எதற்காக விக் வைத்து வந்தார்கள் என்று சந்தேகப்பட்டு, அவர்களின் கூந்தலை அவிழ்த்து பார்த்து, அந்த விக்கை வெளியே எடுத்தனர்.. அதற்குள் தங்க வளையல்கள், சிறு தங்கக்கட்டிகள் பளபளவென மின்னி கொண்டிருந்தன.. பிறகு, அந்த பெண்களின் உள்ளாடையையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சின்ன சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப்பசைகள் மறைத்து வைத்திருந்ததையும் கண்டுப்பிடித்தனா்...

அவிழ்ந்த கூந்தல்

அவிழ்ந்த கூந்தல்

பிறகென்ன? 3 பேரையும் கொத்தோடு அள்ளிக் கொண்டு போனார்கள் பெண் போலீசார். அதாவது, உள்ளாடையில் வைத்திருந்த அந்த தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூ.23 லட்சம் இருக்குமாம்.. இவர்களாவது பரவாயில்லை. இப்போதும் ஒரு பெண் சிக்கி உள்ளார்.. ஆனால், வெறும் 19 வயது பெண்ணா, இப்படி ஒரு காரியத்தை செய்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது.. கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. அவர் பெயர் ஷகிலா.. துபாயிலிருந்து கரிப்பூர் ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார்...

நைஸா நழுவி

நைஸா நழுவி

இவர் தன்னுடைய உள்ளாடைக்குள் ஒரு கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.. மொத்தம் 1884 கிராம் தங்கமாம்.. ஏர்போர்ட்டில் சுங்கத்துறை அதிகாரிகளின் வழக்கமான பரிசோதனைகளில் சிக்காமல், இந்த பெண் நைஸாக நழுவி, ஏர்போட்டை விட்டு வெளியே வந்துள்ளார்... கரெக்ட்டாக அந்த நேரம் பார்த்துதான், யாரோ தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது.. உடனே ஏர்போர்ட்டை விட்டு வெளியேறி கொண்டிருந்த ஷகீலாவை காசர்கோடு மாவட்ட போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

உள்ளாடை

உள்ளாடை

அப்போது, அவரது உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ஷகிலாவை சோதனை செய்தபோது, அவரிடம் தங்கம் இருப்பதற்கான எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. ஆனாலும், ஷகிலா, தங்கம் தன்னிடம் இல்லை என்று பிடிவாதமாக மறுத்தார். இதனால் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோதுதான், தங்கத்தை "பேஸ்ட்" போல மாற்றி, அதை 3 பாக்கெட்டுகளில் அடைத்து, அதை உள்ளாடைக்குள் வைத்து தைத்து மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அதிகாரிகளின் பிடியில் வசமாக சிக்கி உள்ளார் 19 வயதே ஆன ஷகிலா..!!

 சிக்கிட்டாரு

சிக்கிட்டாரு

கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் இந்த மரியம் ஷகலா.. துபாயில் உள்ள தன்னுடைய குடும்பத்தினரை பார்ப்பதற்காக விசிட்டர்ஸ் விசாவில் சென்றுவிட்டு, நேற்றுதான் விமானம் மூலம் திரும்பி வந்திருகிறார்.. கோழிக்கோடு கரிப்பூர் ஏர்போர்ட் வந்த அவர் சுங்கத்துறை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் கடந்து, விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்துவிட்டார்... இதற்கிடையேதான், அவர் தங்கம் கடத்திக்கொண்டு வந்திருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவல் கிடைத்து, அதற்கு பிறகு சிக்கினார்.

 உள்ளாடையுடன்

உள்ளாடையுடன்

உள்ளாடையுடன் தைக்கப்பட்ட நிலையில், அந்த தங்கத்தை மறைத்து வைத்திருந்தாராம்.. மொத்தம் 1,884 கிராம் எடை உள்ள 24 காரட் தங்கம் அவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது... வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கு என்பதால், அது சுங்கத்துறைக்கு உடனடியாக மாற்றப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதுதான், துபாயில் உள்ள குடும்பத்தினரை சந்திக்க விசிட்டர்ஸ் விசாவில் சென்றுவந்ததாகவும், தன்னுடைய நண்பர் ஒருவர் தங்கத்தை கொடுத்து அனுப்பியதாகவும் போலீசில் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, இப்படி தங்கம் கடத்துவது இதுதான் முதல்முறை என்றும் ஷகிலா போலீசில் தெரிவித்தாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+