குளிப்பதை வீடியோ எடுத்த ஆன்ட்டி.. மிரட்டி லாட்ஜ்களுக்கு கூட்டிட்டு.. 17 வயது சிறுமியின் ஷாக் தகவல்!
17 வயது சிறுமியை சீரழித்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
திருவனந்தபுரம்: "நான் குளிக்கும்போது, அந்த ஆன்ட்டி ரகசியமா வீடியோ எடுத்துட்டாங்க.. அந்த வீடியோவை காட்டி மிரட்டி.. என்னை லாட்ஜ்களுக்கு கூட்டிட்டு போய் பல பேருக்கு விருந்தாக்கினாங்க" என்று 17 வயது சிறுமியின் கண்ணீர் தகவல் கேரள மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் குறிப்புழா பகுதியை சேர்ந்த 17 வயது பெண் இவர்.. ஒருநாள் தனியார் நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைத்திருப்பதாக பெற்றோரிடம் சொன்னாள்.. அதன்படியே கிடைத்த அந்த வேலைக்கும் தினமும் சென்று வந்தாள்.. காலையில் கிளம்பி போனால் சாயங்காலம்தான் சிறுமி வீட்டுக்கு வருவாள்.
அப்படித்தான் போன 9-ந்தேதியும் வேலைக்கு போவதாக கிளம்பி சென்றாள்.. ஆனால் சாயங்காலம் ஆனதும் சிறுமியை காணவில்லை.. வீட்டுக்கு மகள் வராததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை.

ஒப்படைப்பு
மறுநாள் காலையில் சொந்தக்கார பெண் ஒருவர், சிறுமியை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தார். திருவனந்தபுரம் பகுதியில் தவித்து கொண்டிருந்ததாகவும், அதை பார்த்து கூட்டிவந்ததாகவும் கூறி வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றார். ஆனால் மகள் எதையோ பறிகொடுத்தவள் போலவே இருந்தாள்.. நடவடிக்கையில் நிறைய வித்தியாசம் தெரிந்தது.

மிரட்டல்
அதனால் பயந்துபோன பெற்றோர் மகளுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்து தந்தனர். அப்போதுதான் நிறைய பகீர் விஷயங்கள் வெளியே வந்தன. இந்த சிறுமி ஒருநாள் வீட்டில் குளித்து கொண்டிருந்தாராம்.. சொந்தக்கார பெண் ஒருவர், சிறுமி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோவை சிறுமிக்கு போட்டு காட்டி, சொன்னபடி கேட்காவிட்டால், குளிக்கும் வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டி இருக்கிறார்.

விபச்சாரம்
சிறுமியை பல பேருக்கு விருந்தாக்கி உள்ளார்.. திருவனந்தபுரம், கொல்லம், கொட்டியம் என நிறைய இடங்களில் லாட்ஜ்-களுக்கு சிறுமியை அழைத்து சென்று, அங்கு பலரை வரவழைத்து விபச்சாரத்தில் தள்ளி உள்ளார்.. இதன்மூலம் அந்த பெண் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளார்.

லாட்ஜ்
இதை கேட்டு பெற்றோர் உள்ளிட்ட அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.. சொந்தக்கார பெண்ணின் பெயர் லினட், வயது 30 என்பது தெரியவந்துள்ளது. கருநாகப் பள்ளியில் லாட்ஜ் நடத்தி வந்த பிரதீப், ரினு, நசீம் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். 17 வயது சிறுமியை நிறைய பேர் சீரழித்த சம்பவம் கேரள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications