நண்பரின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய இளைஞர்.. விசாரணையில் பகீர் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் பெண்ணை கடத்திச் சென்று துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சனல். இவருடைய மனைவி ஆதிரா (27). சனலின் நண்பர் அகில் (31). அகிலும் ஆதிராவும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர்.

இந்த நிலையில் அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஆதிரா பணம் மற்றும் நகையை கொடுத்து உதவி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆதிரா, அகிலிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் இந்த கடன் பிரச்சினையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றும். மேலும் கடந்த 29ஆம் தேதியும் ஆதிரா அகிலிடம் தனக்கும் பணத்தேவை இருக்கிறது, நகைகளும் தேவைப்படுகிறது. அதனால் நான் கொடுத்த பணத்தையும் நகையையும் திருப்பி கொடு என கேட்டுள்ளார். அப்போது மீண்டும இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த நாள் முதல் ஆதிராவை காணவில்லை. இதையடுத்து அவருடைய கணவர் சனல், உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆதிராவின் போனை ஆய்வு செய்த போது போலீஸாருக்கு துப்பு கிடைத்தது.
அதில் கடைசியாக ஆதிரா அகிலுடன் பேசியது தெரியவந்தது. இந்த நிலையில் அகிலை தேடிய போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் விசாரிக்க வேண்டிய விதத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ஆதிராவை நான்தான் கொன்றேன் என்பதை அகில் ஒப்புக் கொண்டார்.
விசாரணையில் ஆதிராவை நான்தான் கடத்திச் சென்றேன். அவரிடம் கடன் வாங்கிய பணத்தையும் நகையையும் திருப்பி தருவதாக அவரை என்னுடன் அழைத்துச் சென்றேன். அதிரப்பள்ளி அருகே ஆற்று பகுதியில் அவரது கழுத்தை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் நெரித்தேன். பிறகு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசினேன். ஆதிரா தான் கொடுத்த பணத்தையும் நகையையும் திரும்ப கேட்டதால்தான் அவரை கொன்றேன் என வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் அதிரப்பள்ளி ஆற்றுக்குச் சென்று அங்கு ஆற்றின் கரையில் ஆதிராவின் கால் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன. இதையடுத்து அவற்றை போலீஸார் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்ற உடல் பாகங்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அகிலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications